ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளரின் மன்னார் விஜயம்
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் என்ட்ரோ பிரஞ்ச் ( (Marc Andre Franche) மன்னாருக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
குறித்த விஜயமானது இன்று (04) மேற்கொள்ளப்பட்டதோடு இதன் போது பல்வேறு சந்திப்புக்களும் இடம்பெற்றுள்ளது.
இதனடிப்படையில், மன்னார் மனித உரிமைக்கும் மற்றும் அபிவிருத்திக்குமான நிலையத்தில் விசேட சந்திப்பு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்ட உறவு
இதன் போது மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதனுடன் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் மற்றும் ரனித்தா ஞானராஜ் ஆகியோரையும் சந்தித்து மன்னார் மாவட்டத்தின் மனித உரிமைகள் நிலைப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடையங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மன்னார் நகர பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சதோச மனித புதைகுழியை இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் நேரடியாக சென்று பார்வையிட்டதுடன் இதன் போது ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதி நிதி உள்ளிட்ட குழுவினருடன் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகள், மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா, மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் மற்றும் ரனித்தா ஞானராஜ் ஆகியோரும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |