நீச்சல் தடாகத்தில் அத்துமீறி நுழைந்த பல்கலை மாணவன் நீரில் மூழ்கி பலி!
ரஜரட்ட பல்கலைக்கழக நீச்சல் தடாகத்தில் அத்துமீறி நுழைந்த 6 மாணவர்களில் ஒரு மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் மாணவர்கள் பாதுகாப்பற்ற முறையில் நடந்து கொண்டதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சஞ்சீவனி கினிகத்தர தெரிவித்துள்ளார்.
நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் இருந்த மாணவனை மிஹிந்தலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை

மட்டக்களப்பு கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முருகதாஸ் திலக்சன் என்பவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதனையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 14 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்