மஹர சிறைச்சாலையைச் சுற்றி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நீக்கம்!
ராகம காவல்துறை பிரிவுக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சூழவுள்ள மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு நேற்று (01) முதல் பிறப்பிக்கப்பட்டிருந்த காவல்துறை ஊரடங்கு சட்டம் தற்போது நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்துவதற்காக மறுஅறிவித்தல் வரை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் காவல்துறை ஊரடங்குச் சட்டம் நேற்று (1) பிறப்பிக்கப்பட்டது.
அதற்கமைய, 246/கெந்தலியத்த பாலுவ - மேற்கு, 246/சீ கெந்தலியத்த பாலுவ - வடக்கு மற்றும் 181/ஜீ தம்புவ ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கே இவ்வாறு காவல்துறை ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.
சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை
இந்தநிலையில், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் குறித்த காவல்துறை ஊரடங்கு சட்டம் தற்போது முதல் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மஹர சிறைச்சாலையில் ஏற்பட்டிருந்த அமைதியின்மை தற்போது முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சிறைச்சாலையில் நிலவிய அசாதாரண சூழ்நிலை கட்டுப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கைதிகள் அனைவரும் மீண்டும் அவர்களது சிறை அறைகளுக்குள் பாதுகாப்பாக அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |