விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த யுவதி! விசாரணைகள் தீவிரம்
அவிசாவளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட மனமேந்திர மாவத்தையில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
நேற்று (10) மாலை குறித்த விடுதியில் தங்கியிருந்த ஜோடியில் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் முறைப்பாடு கிடைத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
வலப்பனை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
உயிரிழந்த யுவதி நேற்று மாலை நபர் ஒருவருடன் விடுதிக்கு வந்து அங்குள்ள அறையில் தங்கியிருந்த நிலையில், சிறிது நேரத்தில் யுவதி மயங்கி விழுந்துள்ளதாக உடன் இருந்த நபர் ஹோட்டல் நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து காவல்துறையினருக்கு வழங்கிய தகவலை அடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
இந்நிலையில், சடலம் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் காவல்துறையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவிசாவளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |