நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நூற்றுக்கணக்கான ஆயுதங்கள் - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தகவல்

Colombo Parliament of Sri Lanka Sri Lanka Politician Ministry of Defense Sri Lanka
By Nithusan Aug 26, 2023 01:59 PM GMT
Report

நாடாளுமன்றத்தில் உள்ள அதிகளவான உறுப்பினர்களிடம் தற்போதும் நூற்றுக்கணக்கான ஆயுதங்கள் இருப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 1980 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் வழங்கப்பட்ட ஆயுதங்களை குறித்த தரப்பினர் இதுவரை திருப்பித்தரவில்லை என கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இலங்கையில் கடந்த 1980 ஆம் ஆண்டுகளில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக அரசியல் கட்சிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஆயுதங்கள் வழங்கப்பட்டதாக தெரிவித்த அவர் , சில அரசியல் கட்சிகளுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஆயுதங்கள் கூட வழங்கப்பட்டிருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆயுதங்களை மீளப்பெற்றுக் கொள்வதில் சிக்கல்

நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நூற்றுக்கணக்கான ஆயுதங்கள் - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தகவல் | Upon Hundred Arms To Members Of Parliament

இவ்வாறு ஆயுதங்கள் வழங்கப்பட்ட சில தரப்பினர் தற்போது உயிருடன் இல்லை எனவும் இதனால் அவர்களுக்கு வழங்கிய ஆயுதங்களை மீளப்பெற்றுக் கொள்வதில் பாரிய சிக்கல் நிலை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந் நிலையில் ஆயுதங்களை தமது கையிருப்பில் வைத்திருக்கும் அரசியல்வாதிகளிடமிருந்து அவற்றை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் கொள்கை ரீதியிலான தீர்மானமொன்றை மேற்கொள்ள வேண்டுமென பிரமித்த பண்டார தென்னகோன் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்படும் வரை அரசியல்வாதிகளிடம் உள்ள ஆயுதங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு காவல்துறை மா அதிபர், ஏனைய பொறுப்பதிகாரிகள் மற்றும் அரச புலனாய்வு பிரிவினருக்கு தான் பணித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் ஆயுத கட்டளைகளில் திருத்தங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அனுமதி கிடைக்கப் பெற்றதன் பின்னர், குறித்த சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமெனவும் பிரமித்த பண்டார தென்னகோன் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்