நாமலின் பெயரை கூறியதும் பொங்கிய அர்ச்சுனா! ஆளுங்கட்சியுடன் மோதல்
பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்க நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குறித்து கருத்து தெரிவித்தபோது நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா பதிலளிக்க தொடங்கியதால் சபையில் வாக்குவாதம் ஒன்று ஏற்பட்டது.
நாடாளுமன்றத்தில் இன்று (06) நடைபெற்ற அவசரகால சட்ட விவாதத்தின் போது அந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாக்குவாதம்
அதன்போது, பிரதி அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை பார்த்து, “சும்மா சும்மா கத்த வேண்டாம்” என கேட்டுக் கொண்டார்.

பின்னர், அதற்கு பதில் அளித்த அர்ச்சுனா, “நாமல் பற்றி கதைக்கும் போது எனக்கு கோபம் வருவதாக கூறுகிறார்கள், ஆனால் நாமலின் தந்தையின் பெயரை கூறும் போது அரசாங்கத்தில் உள்ளவர்கள் சிறுநீர் கழிப்பார்கள் என்று தனக்கு தெரியும்” என்று கூறியுள்ளார்.
அத்தோடு, மகிந்த ராஜபக்சவை சந்திக்கப் போகும் போது, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் செருப்பை கழற்றி வைத்து சென்றதாகவும் அவ்வாறு செய்ய வெட்கமாக இருக்கவில்லையா என்றும் அர்ச்சுனா கேட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |