சீன நிறுவனங்களுக்கு பொருளாதார தடை விதித்த அமெரிக்கா
சீன நிறுவனங்கள் மூன்றிற்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானுக்கு உதவியதாக கூறியே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு சீனா பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.
பொருளாதார தடை
இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதாக தெரிவித்து நவீன ஆயுதங்களான பாலிஸ்டிக் ஏவுகணைகள், டிரோன்கள் என்பவற்றை தயாரித்து வருகின்றது.
இந்த ஆயுதங்களை தயாரிப்பதட்காக சீனாவிலுள்ள நிறுவனங்கள் பாகிஸ்தானுக்கு பொருட்கள் வழங்கியதாக கூறியே அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
இதனைத்தொடர்ந்து ஜெனரல் டெக்னாலஜி லிமிடெட், லுவோ லுவோ தொழில்நுட்ப வளர்ச்சி கழகம் மற்றும் சாங்சோ உடெக் கம்போசிட் ஆகிய 3 சீன நிறுவனங்களுக்கே இவ்வாறு பொருளாதார தடையை விதித்துள்ளது.
''பேரழிவு தரும் ஆயுதங்களின் பெருக்கம் மற்றும் வினியோகம் எங்கு நடந்தாலும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்'' அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார்.