ஈரான் மீதான கடற்படை முற்றுகை தீவிரம்! திருப்பி அனுப்பப்பட்ட 67 வணிகக் கப்பல்கள்கள்
ஈரானியத் துறைமுகங்களை நோக்கிச் சென்ற அல்லது அங்கிருந்து புறப்பட்ட 67 வணிகக் கப்பல்கள்கள் திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க மத்தியக் கட்டளைப் பிரிவு (CENTCOM) இதனை தெரிவித்துள்ளது.
ஈரான் மீது புதுப்பிக்கப்பட்ட கடற்படை முற்றுகையை (Naval Blockade) பலப்படுத்தும் நடவடிக்கையாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முற்றுகை உத்தரவு
மேலும், முற்றுகை உத்தரவுகளை மீற முயன்ற 3 கப்பல்கள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும் 2 கப்பல்களில் அமெரிக்கப் படையினர் ஏறி சோதனை நடத்தியதாகவும் மத்தியக் கட்டளைப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மத்திய கிழக்கில் போர் வெடித்ததில் இருந்து ஹோர்முஸ் நீரிணை பகுதி ஒரு இரட்டை முற்றுகை நிலையை எதிர்கொண்டுள்ளது.
U.S. Marine Corps MV-22B Osprey utility aircraft take off from the flight deck of USS Boxer (LHD 4) while the ship transits the Arabian Sea and continues to enforce the U.S. blockade against Iran. As of Aug. 20, U.S. forces have redirected 67 commercial vessels, disabled 3 and… pic.twitter.com/UAOmcLWExf
— U.S. Central Command (@CENTCOM) August 20, 2026
இந்தநிலையில் அமெரிக்கக் கூட்டணி நாடுகளுடன் தொடர்புடைய கப்பல்களின் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த ஈரான் முயன்று வருகிறது.
இதற்குப் பதிலாக, சர்வதேச எரிசக்திப் பாதைகளைத் திறந்த நிலையில் வைத்திருக்க அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதல்கள், கடற்படைப் பாதுகாப்பு மற்றும் ஈரானியத் துறைமுகங்கள் மீதான முற்றுகை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த பிண்ணனியில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் எவ்வித உடன்பாடும் எட்டப்படாததைத் தொடர்ந்து ஈரான் மீது மேலும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய (Crushing) கடுமையான பொருளாதார நடவடிக்கைகளும் தடைகளும் விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |