ஹவுதிகளுடன் நேரடி பேச்சில் இறங்கியது அமெரிக்கா
சவுதி ஆதரவு பெற்ற யேமன் அரச படையினருக்கும் ஈரான் பின்புலமாக விளங்கும் ஹவுத்தி அமைப்பினருக்கும் இடையே தற்போது நடைபெற்று வரும் போரில் ஹவுத்திகளின் கை ஓங்கியுள்ள நிலையில் அந்த அமைப்புடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதன்படி ஹவுத்தி அமைப்பினருடன் அமெரிக்க அரசாங்கம் நேரடிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.
முக்கிய தீவை கைப்பற்றிய ஹவுத்திகள்
கான்சாஸ் நகரில் நடைபெறவுள்ள தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய வான்ஸ், பாப்-அல்-மண்டேப் (Bab-el-Mandeb) நீரிணையில் உள்ள மாயூன் தீவை ஹவுத்திகள் கைப்பற்றியிருப்பது குறித்துத் தான் கவலை கொண்டிருப்பதாகக் கூறினார்.

மேலும், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா மற்றும் "இப்பிராந்தியத்தில் பாதிக்கப்பட்டுள்ள பிற தரப்பினர்" ஆகியோருடன் அமெரிக்கா தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் வான்ஸ் குறிப்பிட்டார்.
இதேவேளை ஏமனில் தொடர்ந்து நடைபெற்று வரும் மோதல்கள் காரணமாக 93,000-க்கும் மேற்பட்டோர் புதிதாக இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (IOM) தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |