பசில் ராஜபக்சவுக்கு இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கை: நாட்டிற்கு அழைத்து தீவிர நடவடிக்கை

Basil Rajapaksa United States of America Law and Order
By Shalini Balachandran Oct 25, 2026 06:59 AM GMT
Report

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவை (Basil Rajapaksa) அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வருவதற்கான சர்வதேசச் சட்ட மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் பசில் ராஜபக்சவிற்கு எதிராக இன்டர்போல் (Interpol) மூலம் சிவப்பு எச்சரிக்கை (Red Notice) பிறப்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபை தேர்தலின் போது இலங்கை சுற்றுலா விளம்பரப் பணியகத்திற்கு (SLTPB) ஒதுக்கப்பட்ட ரூபாய் 7.8 மில்லியன் நிதியை விளம்பர நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தாமல் 12,000 டி-ஷர்ட்டுகளை வழங்கி அரசுக்கு நிதியிழப்பு ஏற்படுத்தியதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) குற்றஞ்சாட்டியுள்ளது.

செம்மணியில் சர்வதேச தடயவியல் விசாரணை : கனேடிய அதிகாரிகளிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

செம்மணியில் சர்வதேச தடயவியல் விசாரணை : கனேடிய அதிகாரிகளிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

சிவப்பு எச்சரிக்கை

இந்தநிலையில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பசில் ராஜபக்சவைக் கைது செய்ய சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் திறந்த பிடியாணையைப் பிறப்பித்துள்ளதுடன் இன்டர்போல் மூலம் சிவப்பு எச்சரிக்கை பெறுமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது.

இதனடிப்படையில் அமெரிக்கா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளின் குடியுரிமையைக் கொண்டுள்ள (Dual Citizen) பசில் ராஜபக்சவை நாட்டிற்கு அழைத்து வர 1999 ஆம் ஆண்டு இரு நாடுகளுக்குமிடையே கைச்சாத்தான குற்றவாளிகளை ஒப்படைக்கும் ஒப்பந்தம் (1999 Extradition Treaty) பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பசில் ராஜபக்சவுக்கு இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கை: நாட்டிற்கு அழைத்து தீவிர நடவடிக்கை | Us Extradition Sought For Basil Rajapaksa

பசில் ராஜபக்சவை அமெரிக்க நீதிமன்றங்கள் மற்றும் வெளியுறவுத் திணைக்களத்தின் (US State Department) மூலம் இலங்கைக்கு ஒப்படைப்பதற்கான சட்ட ஆவணங்களைத் தயாரிக்கும் பணியில் சட்டமா அதிபர் திணைக்களமும் (AG's Department) வெளி விவகார அமைச்சும் இணைந்து ஈடுபட்டுள்ளன.

இந்தநிலையில் இன்டர்போல் மூலம் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படும் பட்சத்தில் பசில் ராஜபக்ச, அமெரிக்காவை விட்டு வேறு எந்தவொரு நாட்டிற்கும் தப்பிச் செல்ல முடியாது எனச் சட்ட அமலாக்கப் பிரிவினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

50 கோடி மதிப்புள்ள போதைப்பொருளுடன் ஒருவர் கைது

50 கோடி மதிப்புள்ள போதைப்பொருளுடன் ஒருவர் கைது

அநுராதபுரத்தில் விபத்து : 10 வயது சிறுமி ஸ்தலத்திலேயே உயிரிழப்பு!

அநுராதபுரத்தில் விபத்து : 10 வயது சிறுமி ஸ்தலத்திலேயே உயிரிழப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026