வல்லரசுகளின் சதுரங்க வேட்டையில் சிக்கிய தமிழர் பிரதேசம்...! சுற்றி வளைக்கும் அமெரிக்கா...
வெனிசுலாவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிய அமெரிக்கா, தற்போது தனது அடுத்தகட்ட பார்வையை இந்து சமுத்திரத்தின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலைத் துறைமுகத்தின் பக்கம் திருப்பியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இந்த அதிரடி நகர்வுகள் இலங்கையின் இறையாண்மைக்குச் சவாலாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தநிலையில், ஜனாதிபதி அநுர குமார அரசாங்கம் அமெரிக்காவின் அழுத்தங்களுக்குப் பணிந்து பின்வாங்குகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சர்வதேச அரங்கில் ரஷ்யா போன்ற வல்லரசுகள் பலவீனமடைந்து வருவதைப் பயன்படுத்தி ஆசியப் பிராந்தியத்தில் தனது பிடியை இறுக்க அமெரிக்கா முயற்சிக்கின்றது.
இவ்வாறான இராஜதந்திரப் போரில் திருகோணமலை ஒரு முக்கிய தளமாக மாற்றப்படுவது இலங்கைக்குப் பாரிய அச்சுறுத்தலாகும்.
இறுதியில், வல்லரசுகளின் நலன்களுக்காகச் சிறிய நாடுகளின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் குறிவைக்கப்படுவதையே இந்த நகர்வுகள் வெளிப்படுத்துகின்றன.
இது குறித்து விரிவாக ஆராய்கின்றது கீழுள்ள காணொளி...!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |