ஈரானிய தூதுக்குழுவின் நம்பிக்கையைப் பெறுவதில் அமெரிக்கா தோல்வி
பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் ஈரானிய தூதுக்குழுவுக்குத் தலைமை தாங்கிய ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் கலிபாப், அமெரிக்கா எமது நம்பிக்கையைப் பெற முடியுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்க வேண்டிய நேரம் இது என்று தெரிவித்துள்ளார்.
அவர் தனது X தளத்தில் பதிவிட்டுள்ள, பேச்சுவார்த்தைக்கு முன்னதாக ஈரான் நல்லெண்ணத்தையும் விருப்பத்தையும் கொண்டிருந்ததாக வலியுறுத்தியுள்ளார்.
எனினும், முந்தைய இரண்டு போர்களின் அனுபவங்கள் காரணமாக தமக்கு மறுபுறம் இருந்த தரப்பினர் மீது நம்பிக்கை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் நாடாளுமன்ற சபாநாயகரின் பதிவு
ஈரானிய தூதுக்குழு முன்னோக்கிச் செல்லும் முயற்சிகளை முன்வைத்த போதிலும், எதிர்த் தரப்பினர் இந்த சுற்றுப் பேச்சுவார்த்தையில் ஈரானிய தூதுக்குழுவின் நம்பிக்கையைப் பெறுவதில் இறுதியில் தோல்வியடைந்துள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.
۱/پیش از مذاکرات تأکید کردم که ما حسن نیت و ارادهٔ لازم را داریم ولی به دلیل تجربیات دو جنگ قبلی، اعتمادی به طرف مقابل نداریم.
— محمدباقر قالیباف | MB Ghalibaf (@mb_ghalibaf) April 12, 2026
همکاران من در هیئت ایرانی میناب۱۶۸ ابتکارات رو به جلویی مطرح کردند ولی طرف مقابل در نهایت نتوانست در این دور از مذاکرات اعتماد هیئت ایرانی را جلب کند.
ஈரானின் நாற்பது நாள் தேசிய தற்காப்பு சாதனைகளை வலுப்படுத்தும் முயற்சியில் இருந்து நாம் ஒரு கணம் கூட பின்வாங்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தைகள் மிகவும் தீவிரமாக இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், வழிவகைகளைச் செய்து கொடுத்த பாகிஸ்தானுக்குத் தமது நன்றியையும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |