அணு ஒப்பந்த நகர்வுக்கிடையில் இந்திய பெருங்கடலில் அதிகரிக்கும் அமெரிக்க படைகள்
ஈரானின் அணு திட்டம் குறித்து “நேரம் குறைந்து வருகிறது” என எச்சரித்து, பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்க இராணுவப் படைகள் பெரிதும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி, அறிவித்துள்ளார்.
ட்ரம்ப், தனது சமூக ஊடகமான Truth Social-ல், “ஈரான் விரைவாக பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் - ணு ஆயுதங்கள் வேண்டாம்” என்று கூறி, USS Abraham Lincoln கப்பல் தலைமையிலான மாபெரும் கடற்படை படையணியின் தயார்தன்மையை பதிவு செய்தார்.
இதற்கு பதிலாக, ஈரானின் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி, “ஈரான் எப்போதும் அமைதியான அணு ஒப்பந்தத்துக்கு தயாராக உள்ளது எங்கள் விரல்கள் துப்பாக்கி கொக்கியில் இருக்கின்றன” என்று தெரிவித்தார்.
ஈரானில் நாணய வீழ்ச்சி
ஈரானில் நாணய வீழ்ச்சி காரணமாக ஏற்பட்ட போராட்டங்களில் 6,301 பேர் கொல்லப்பட்டதாக மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

மற்றொரு அமைப்பான Iran Human Rights அமைப்பானது, இறுதி உயிரிழப்புகள் 25,000-ஐ கடந்திருக்கலாம் என எச்சரித்துள்ளது.
இவ்வாறான பின்னணியில் ஜோர்தான், கட்டார், மற்றும் இந்தியன் ஓஷியனில் அமெரிக்க படையணி இயக்கங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக செயற்கைக்கோள் மற்றும் விமானத் தகவல்களை சர்வதேச ஊடகங்கள் மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளன.
2015 ஆம் ஆண்டு உலக சக்திகளுடன் செய்யப்பட்ட ஈரானின் அணு ஒப்பந்தத்தின் கீழ், யுரேனியம் செறிவு கட்டுப்பாடுகள் இருந்தது.
ஆனால் ட்ரம்ப் 2018 இல் ஒப்பந்தத்திலிருந்து விலகி அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது பொருளாதார தடைகள் விதித்தது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் அதிகமான பதற்றம் உருவாகி உள்ளது. ஆனால் நேரடி தாக்குதல் நடைபெறுமா என்பது இன்னும் தெளிவாக இல்லை.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |