அமெரிக்காவை உலுக்கும் பனிப்புயல்...! நியூயார்க்கில் அவசர நிலை பிரகடனம்

United States of America New York World
By Shalini Balachandran Feb 23, 2026 07:00 PM GMT
Report

அமெரிக்காவின் நியூயோர்க் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

150 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக மோசமான பனிப்புயல் தாக்கி வருவதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தெரியவருகையில், அமெரிக்காவில் நியூயோர்க் உட்பட வடகிழக்குப் பகுதியில் இருந்து பனிப்புயல் வீசத் தொடங்கியுள்ளது.

உக்ரைனின் அதிரடிப் பதில் தாக்குதல்: மொஸ்கோவில் முடக்கப்பட்ட விமான சேவை

உக்ரைனின் அதிரடிப் பதில் தாக்குதல்: மொஸ்கோவில் முடக்கப்பட்ட விமான சேவை

வானிலை மையம்

இதைக் கணித்த அந்நாட்டு தேசிய வானிலை மையம், கடுமையான காற்றுடன் அதிக பனியைக் கொட்டும் புயலுக்கான ப்ளிசார்டு (Blizzard) எச்சரிக்கையை, ஒன்பது ஆண்டுகளுக்குப் பின் விடுத்துள்ளது.

பனிப்புயலின் தாக்கத்தால் பல இடங்களில் மூன்று அடி உயரம் வரை பனி குவிந்துள்ளது.

அமெரிக்காவை உலுக்கும் பனிப்புயல்...! நியூயார்க்கில் அவசர நிலை பிரகடனம் | New York Declares Emergency Due To Record Blizzard

இதையடுத்து நியூயோர்க் மற்றும் நியூ ஜெர்சி மாகாணங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அவசரப் போக்குவரத்து தவிர அனைத்துப் போக்குவரத்திற்கும் நியூயார்க் மேயர் மம்தானி தடை விதித்துள்ளார்.

கடும் பனிப்பொழிவுடன் தீவிர புயல் வீசுவதால் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானியா சென்று பெருத்த ஏமாற்றம்! கவலையில் நாமல் வெளியிட்ட அறிவிப்பு

பிரித்தானியா சென்று பெருத்த ஏமாற்றம்! கவலையில் நாமல் வெளியிட்ட அறிவிப்பு

விமான நிலையங்கள்

நியூயோர்க்கின் முக்கிய விமான நிலையங்களில் 10,000-இற்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்கா முழுவதும் 13,000 இற்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவை உலுக்கும் பனிப்புயல்...! நியூயார்க்கில் அவசர நிலை பிரகடனம் | New York Declares Emergency Due To Record Blizzard

அத்தோடு நியூயார்க் நகரத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

வடகிழக்கு அமெரிக்காவில், 3.5 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

பாஸ்டன், மேரிலேன்ட் மற்றும் விர்ஜீனியா உள்ளிட்ட மாகாணங்களிலும் பனிப்புயல் வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது வடகிழக்கு அமெரிக்காவை 150 ஆண்டுகளில் இல்லாத அளவு தாக்கிய பனிப்புயல் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசியாவின் சிறந்த கடற்கரைகளின் பட்டியலில் இலங்கை கடற்கரைகளுக்கு கிடைத்துள்ள இடம்!

ஆசியாவின் சிறந்த கடற்கரைகளின் பட்டியலில் இலங்கை கடற்கரைகளுக்கு கிடைத்துள்ள இடம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026