அமெரிக்காவில் ரத்து செய்யப்பட்டுள்ள விசாக்கள்: வெளியான அதிர்ச்சி தகவல்
அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை வெளிநாட்டினரின் 85 ஆயிரம் விசாக்களை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து வழங்கியுள்ளார்.
தாக்குதல்கள்
மேலும் கருத்து தெரிவித்த அவர், “ட்ரம்ப்பும் செயலாளர் மார்கோ ரூபியோவும் ஒரு எளிய ஆணையைப் பின்பற்றுகிறார்கள்.
அமெரிக்காவை மீண்டும் பாதுகாப்பானதாக மாற்றும் வரை அவர்கள் ஓயமாட்டார்கள்.

கடந்த ஜனவரி மாதம் முதல் எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உட்பட வெளிநாடுகளை சேர்ந்த 85 ஆயிரம் பேர்களின் விசாக்களை நாங்கள் ரத்து செய்துள்ளோம்.
இதுமுந்தைய ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகம், தாக்குதல்கள் மற்றும் திருட்டுக்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிப்பவர்களின் விசாக்களை நாங்கள் ரத்து செய்துள்ளோம்.
விண்ணப்பதாரர்
இவை மட்டுமே கிட்டத்தட்ட பாதி விசா ரத்துகளுக்குக் காரணம் ஆகும்.
இவர்கள் நமது சமூகங்களின் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தலாக இருப்பவர்கள் எனவே அவர்கள் நம் நாட்டில் இருக்க நாங்கள் விரும்பவில்லை.

அமெரிக்கா விசாவுக்கு விண்ணபிப்பவர்களுக்கு அனுமதி வழங்க நாங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமோ எடுத்துக்கொள்வோம்.
மேலும், விண்ணப்பதாரர் அமெரிக்கர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்க மாட்டார் என்பதை உறுதி செய்யும் வரை நாங்கள் விசா வழங்க மாட்டோம்.
ஒரு விண்ணப்பதாரர் விசாவிற்குத் தகுதி பெறுகிறாரா என்பதைத் தீர்மானிக்கும் போது தூதரக அதிகாரிகள் ஒரு காரணியை மட்டும் பார்க்காமல் அந்த நபரின் ஒட்டுமொத்த சூழ்நிலையையும் பார்த்து பின்னர் விசா வழங்குவற்கான தகுதி குறித்து தீர்மானிப்பார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |