ஈரான் போராட்டக்காரர்கள் மீது வன்முறை: 18 அதிகாரிகள் மீது அதிரடித் தடைகளை விதித்த அமெரிக்கா
ஈரானில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டக்கங்களை முடக்க முயற்சிக்கும் அந்நாட்டு அதிகாரிகளுக்கு அமெரிக்கா தடைகளை அறிவித்துள்ளது.
இந்தநிலையில், ஈரான் போராட்டக்காரர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டதாக குற்றம் சுமத்தி இவர்கள் மீது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் புதிய தடைகளை விதித்துள்ளது.
குறித்த விடயம் அமெரிக்க திறைசேரி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விற்பனை நடவடிக்கை
அறிக்கையின் படி, ஈரானைச் சேர்ந்த 18 அதிகாரிகள் மீது இந்த தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் தேசிய பாதுகாப்பு உயர்நிலை கவுன்சில் செயலாளர் மற்றும் அமெரிக்கத் தடைகளை தவிர்க்க ஈரானின் எண்ணெய் விற்பனை நடவடிக்கைகளை நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் உள்ளடங்கியுள்ளனர்.
இந்தநிலையில், மனித உரிமைகள் மீது முன்னெடுக்கப்படும் அரச நடவடிக்கைகளின் பின்னணியில் இருப்பவர்களை கட்டுப்படுத்துவதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க அமெரிக்கா தயங்காது என அந்நாட்டு திறைசேரியின் செயலாளர் ஸ்காட் பெசண்ட் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |