அமீரகத்திலுள்ள அமெரிக்கர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!
ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) வசிக்கும் மற்றும் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்கக் குடிமக்கள் அனைவரும் தீவிர விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏமன் நாட்டின் ஹூதி அமைப்பினரின் ஆயுதமேந்திய தாக்குதல் ஆபத்துகள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அபுதாபியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
உத்தியோகப்பூர்வ அறிவிப்பு
அமெரிக்கத் தூதரகம் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இது குறித்த பதிவொன்றை வெளியிட்டு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
குறித்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஹூதி அமைப்பின் நேரடித் தாக்குதல்கள் மட்டுமின்றி அமெரிக்க அரசு அதிகாரிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் முயற்சித்து வருவதாகவும் அது குறித்தும் குடிமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
Middle East: Americans currently in the Middle East should exercise heightened vigilance due to the increased threat of armed attacks by Iranian-supported Houthis and Iranian efforts to target U.S. government officials in the region. Be aware of potential flight cancellations, airspace closures, and travel disruptions. Read the latest country-specific alerts at https://t.co/fGFPeb6HW3
— US Mission to UAE (@USAinUAE) November 7, 2026
பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக திடீரென விமானச் சேவைகள் ரத்து செய்யப்படலாம் எனவும் வான்வெளிகள் மூடப்படலாம் அல்லது பிராந்தியப் பயணங்களில் பெரும் தடங்கல்கள் ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அமெரிக்கப் பிரஜைகள் தங்களின் பயணத் திட்டங்களை கவனமாகக் கையாளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நிலைமை தீவிரம்
அமீரகத்திற்கு முன்னதாக சவூதி அரேபியாவில் உள்ள அமெரிக்க இராஜதந்திர தூதரகமும் அங்குள்ள அமெரிக்கர்களுக்கு இதேபோன்ற தீவிர பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்திருந்தது.
இதன் தொடர்ச்சியாகவே தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திலும் இந்த எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.'

செங்கடல் மற்றும் வளைகுடாப் பகுதிகளில் ஹூதி அமைப்பினரின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணிப் படைகள் அங்குள்ள தற்காப்பு அமைப்புகளைப் பலப்படுத்தியுள்ளன.
இந்தநிலையில் நிலைமை மேலும் தீவிரமடையக்கூடும் என்பதால் பாதுகாப்பு நடைமுறைகளைத் துல்லியமாகப் பின்பற்றுமாறு தூதரகம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |