மீண்டும் ஆட்டத்தை காட்ட தொடங்கிய அமெரிக்கா! ஈரான் ஜனாதிபதி பகிரங்கம்
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்ற போதிலும், ஈரானுக்கு எதிரான இராணுவக் குவிப்பு மற்றும் அச்சுறுத்தல்களை அமெரிக்கா மீண்டும் முன்னெடுத்து வருவதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா தனது அதிகபட்ச அழுத்தம் கொடுக்கும் கொள்கையையே இப்போதும் பின்பற்றுவதாகவும், ஈரானை பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வந்து தனது ஒருதலைப்பட்சமான கோரிக்கைகளுக்குப் பணிய வைக்க அமெரிக்கா விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இருப்பினும், ஈரானை பணிய வைப்பது என்பது சாத்தியமற்ற ஒன்று என பெசெஷ்கியான் வலியுறுத்தியுள்ளார்.
14 அம்ச ஈரானின் முன்மொழிவு
அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகள் இதற்கு முன்னர் ஒருமுறை நேருக்கு நேர் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தாலும், அடுத்தகட்ட சந்திப்புகளை நடத்துவதற்கான முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன.

Image Credit:
இதேவேளை, 14 அம்சங்களைக் கொண்ட ஈரானின் முன்மொழிவுகளுக்கு அமெரிக்கா தனது பதிலை பாகிஸ்தான் ஊடாகத் தெரிவித்துள்ளதாகவும், அதனை ஈரான் தற்போது பரிசீலித்து வருவதாகவும் ஈரானிய அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், அந்தப் பதிலின் விவரங்கள் குறித்து இரு தரப்பினரும் எதனையும் வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |