ஈரானுக்கு எதிரான போர் :அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு
ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா இராணுவ விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் என குறைந்தது 81 இராணுவ விமானங்களை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்மூலம் ஒட்டுமொத்தமாக 3.3 பில்லியன் அமெரிக்க டொலரை இழந்துள்ளது. F-35A லைட்னிங் II ஸ்டீல்த் விமானம், F-15 விமானங்கள், MQ-1 ரீப்பர் ட்ரோன்கள் போன்ற அதிநவீன விமானங்களையும் இந்த சண்டையில் இழந்துள்ளது. ஒரு F-15 விமானத்தின் விலை 30 மில்லியன் டொலரை விட அதிகமாகும் எனக் கூறப்படுகிறது.
MQ-9 ரீப்பர் ட்ரோனின் விலை
அதேபோல் MQ-9 ரீப்பர் ட்ரோனின் விலையும் சுமார் 30 மில்லியன் முதல் 50 மில்லியன் டொலர் வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது.

ஐந்தாவது தலைமுறை போர் விமானமான F-34A, அமெரிக்காவின் மிகவும் அதிநவீன போர் விமானமாக கருதப்படுகிறது. இதன் விலை 92 மில்லியன் டொலரை விட அதிகம் எனக் கூறப்படுகிறது.
தகவல் அடிப்படையில் அமெரிக்கா 12 F-15E விமானங்களை இழந்தது. F-35A லைட்னிங் II விமானத்தை இழந்துள்ளது. இரண்டு A-10 தண்டர்போல்ட் II கிரவுண்ட்-தாக்குதல் விமானத்தை இழந்துள்ளது.
இழக்கப்பட்ட விமானங்கள்
இதேபோல் KC-135 ஆகாயத்தில் எரிபொருள் நிரப்பும் விமானத்தையும் இழந்துள்ளது. மார்ச் 2-ம் திகதி குவைத்தில் தவறுதலாக F-15 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

மற்றொரு விமானம் ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் அடிப்படையில் கூறப்படுகிறது. ஜோர்டானில் உள்ள விமான தளத்தில் ஈரான் நடத்திய தாக்குதலில் 8 F-15Es விமானங்கள் சேதமடைந்துள்ளன. ஆனால் வெள்ளை மாளிகை மற்றும் பென்டகள் இது குறித்து தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.
அனோஜனுக்கு சவுதியிடம் மன்னிப்பு கோரும்போது ஞானசாரதேரருக்கு ஏன் மன்னிப்பு வழங்கக்கூடாது : நாமல் கேள்வி
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |