குவைத் விமான நிலைய தாக்குதல்! ஈரானின் குற்றச்சாட்டை முற்றாக மறுத்த அமெரிக்கா
குவைத் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையத்தின் ஒரு பகுதி சேதமடைந்ததற்கு, அமெரிக்க தயாரிப்பான பேட்ரியட் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே காரணம் என்று ஈரானின் புரட்சிகர காவல் படை (IRGC) குற்றம் சாட்டியுள்ளது.
ஈரானின் இந்தக் கூற்றை அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) தற்போது திட்டவட்டமாக மறுத்துள்ளதுடன், இந்தத் தாக்குதலுக்கு ஈரானே முழுப் பொறுப்பு என்றும் குற்றம் சாட்டியுள்ளது.
இது தற்செயலாக நடந்த ஒன்றல்ல, மாறாக ஈரானால் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு தாக்குதல் என்று அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.
வேண்டுமென்றே தாக்குதல்
இது குறித்து அமெரிக்க மத்திய கட்டளையகம் எக்ஸ் (X) சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஈரான் பொதுமக்களுக்கான சிவிலியன் விமான நிலையத்தின் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் வேண்டுமென்றே, திட்டமிட்டு, எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி இந்தத் கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளது" என்று தெரிவித்துள்ளது.
🚫CLAIM: Iran claimed today that it did not attack the passenger terminal at Kuwait International Airport and damage was instead caused by a U.S. missile interceptor. Totally FALSE.
— U.S. Central Command (@CENTCOM) June 3, 2026
✅TRUTH: Iran struck the civilian airport with drones in a deliberate, calculated, and… pic.twitter.com/OVrzeDibQl
இதன் மூலம், விமான நிலையச் சேதத்திற்கு அமெரிக்காவின் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு காரணம் என்ற ஈரானின் குற்றச்சாட்டை அமெரிக்கா முற்றிலும் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |