அமெரிக்காவின் கடற்படை முற்றுகை! ஈரானின் புதிய அறிவிப்பால் தணியாத பதற்றம்
அமெரிக்காவின் கடற்படை முற்றுகை தொடரும் வரை ஹார்முஸ் நீரிணையை மூடும் நடவடிக்கை முடிவுக்கு வராது என்று ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகரும் அந்நாட்டின் தலைமைப் பேச்சுவார்த்தையாளருமான முகமது பாகர் காலிபாஃப் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழலில் இரு தரப்பிற்கும் இடையே நிலவும் இணக்கப்பாட்டில் வெறும் ஒன்று அல்லது இரண்டு விடயங்களில் மட்டுமே கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும், ஆனால் அவை எவை என்பது குறித்தோ அல்லது அவற்றின் முக்கியத்துவம் குறித்தோ அவர் எவ்வித விளக்கத்தையும் அளிக்கவில்லை.
ட்ரம்ப்பின் அறிவிப்பு
மறுபுறம், ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் மிகவும் சாதகமாக அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஒரு உடன்பாடு எட்டப்படும் என்பதில் பகிரங்கமாக மிகுந்த நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இருப்பினும், ஹார்முஸ் நீரிணையில் பயணித்த கப்பல் ஒன்று ஈரானிய ஆயுதப் படகுகளால் தாக்குதலுக்கு உள்ளானதாகத் தகவல் வெளியான சில மணிநேரங்களிலேயே ட்ரம்ப் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஈரானின் இத்தகைய மிரட்டல்கள் ஒருபோதும் சகித்துக் கொள்ளப்படாது என்றும் அவர் இதன்போது எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |