அமெரிக்க அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலின் இரகசியங்களை விற்க முயன்ற தம்பதிகளுக்கு ஏற்பட்ட நிலை
அமெரிக்காவில் சாண்ட்விச், சூயிங்கம் போன்றவற்றின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலின் இரகசியத்தை மறைத்து வைத்து விற்க முயன்றதாக அமெரிக்க கடற்படை அணுசக்திப் பொறியாளர் மற்றும் அவரது மனைவி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஜோனாதன் டேபே (Jonathan Toebbe) மற்றும் அவரது மனைவி டயானா (Diana Toebbe) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டிருப்பதாக அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியா மாநில நீதித்துறை அறிவித்துள்ளது.
ஜோனதன் டேபே அமெரிக்க கடற்படையின் அணு உந்துவிசைத் திட்டத்தில் பணியாற்றி வந்தார்.
அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் வடிவமைப்பு தொடர்பான ஒரு இரகசியத்தை சாண்ட்விச்சில் மறைத்து வைத்து ஒருவரிடம் விற்பதற்கு அவர்கள் முயன்றதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்தத் திட்டம் கிட்டத்தட்ட ஒரு வருடம் நீடித்தது.
குறித்த இரகசியத்தை வாங்கும் நபர் தாம் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்று தம்பதியிடம் அறிமுகமாகியிருக்கிறார்.
ஆனால் உண்மையில் அவர் எப்.பி.ஐ. புலனாய்வு அமைப்பின் இரகசிய முகவராவார்.
இதையடுத்து அவர்கள் இருவர் மீதும் இப்போது அணுசக்தி சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.