விரைவில் விலகும் ட்ரம்ப் - பூதாகரமாக வெடிக்கப்போகும் ரஷ்ய - உக்ரைன் போர்!!
ரஷ்யா-உக்ரைன் அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கான தெளிவான அறிகுறிகள் தென்படாவிட்டால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சில நாட்களுக்குள் அதில் இருந்து விலகுவார் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
“நாங்கள் வாரக்கணக்கில் இந்த முயற்சியைத் தொடரப் போவதில்லை. எனவே இப்போதே மிக விரைவாகத் தீர்மானிக்க வேண்டும்” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ ஐரோப்பிய மற்றும் உக்ரேனியத் தலைவர்களைச் சந்தித்த பிறகு தெரிவித்துள்ளார்.
எச்சரிக்கை
ட்ரம்ப் இது தொடர்பில் உறுதியாக இருப்பதாகவும் இதற்காக அவர் நிறைய நேரத்தையும் சக்தியையும் அர்ப்பணித்துள்ளார் என்றும் ரூபியோ சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயம் முக்கியமானதாக இருந்தாலும் இதே அளவிற்கு கவனம் செலுத்தப்பட வேண்டிய இன்னும் பல முக்கியமான விடயங்கள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
உக்ரைனுடனான அமெரிக்க பேச்சுவார்த்தைகளில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதற்கான அறிகுறிகளுக்கு மத்தியில் ரூபியோவின் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அரசியல் சவால்கள்
ரூபியோவின் குறித்த எச்சரிக்கை, அதிகரித்து வரும் புவிசார் அரசியல் சவால்களின் பட்டியலைத் தீர்ப்பதற்கான முயற்சிகளில் முன்னேற்றம் இல்லாததால் வெள்ளை மாளிகையில் அதிகரித்து வரும் விரக்தியை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக கூறப்படுகிறது.
இவ்வாறானதொரு பின்னணியில், உக்ரைனின் கனிமங்களை அமெரிக்கா அணுக அனுமதிக்கும் ஒரு ஒப்பந்தத்தில் அடுத்த வாரம் கையெழுத்திட எதிர்பார்ப்பதாக ட்ரம்ப் நேற்று அறிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
