தாமதமின்றி தேர்தலை நடத்த வேண்டும் - அமெரிக்க செனட் சபையின் வலியுறுத்தல்
உள்ளூராட்சித் தேர்தலை தாமதமின்றி சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்த வேண்டும் என அமெரிக்க செனட் சபையின் வெளிநாட்டு உறவுகள் குழு சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
இலங்கை மக்களின் குரலைப் பறிக்கும் எந்தவொரு முயற்சியும் மறுக்க முடியாத ஜனநாயக விரோதமானது எனவும் இது இலங்கையர்களின் உரிமைகளை நேரடியாக மீறும் செயலாகும் எனவும் அமெரிக்க செனட் சபையின் வெளிநாட்டு உறவுகள் குழு தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளது.
மார்ச் 9 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல், தனது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களால் பிற்போடப்பட்டதாக சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் தெரிவித்தது.
இறுதித் தீர்மானம்
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு தடைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் அது தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எட்டுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு வியாழக்கிழமை (3) கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
US Senate Foreign Relations Committee Urges Sri Lanka to Hold Local Elections Without Delay
— News Cutter (@news_cutter) March 1, 2023
Top Story: https://t.co/HoTJXfkMcw#Slnews #lka #SriLankaToday #srilanka #SriLankaEconomicCrisis
அமெரிக்க செனட் வெளியுறவுக் குழு பற்றி
செனட்டின் அசல் பத்து நிலைக்குழுக்களில் ஒன்றாக 1816 இல் செனட் வெளிநாட்டு உறவுகள் குழு நிறுவப்பட்டது.
அதன் வரலாறு முழுவதும், குழுவானது அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை உருவாக்குவதற்கும் செல்வாக்கு செலுத்துவதற்கும் கருவியாக இருந்து வருகிறது.
வெவ்வேறு நேரங்களில் ஜனாதிபதிகள் மற்றும் மாநிலச் செயலாளர்களின் கொள்கைகளை ஆதரித்தும் எதிர்ப்பதும்.
