இந்தியா மீதான வரி புயல்: ரகசியத்தை உடைத்த ட்ரம்ப்
ரஷ்யாவிடம் (Russia) இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் நாடுகளில் சீனாவுக்கு (china) அடுத்த இடத்தில் இந்தியா (India) உள்ளமையினால்தான் இந்தியா மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, இது போன்ற நடவடிக்கை மற்ற நாடுகளுக்கும் தொடரும் என அமெரிக்க அதிபர் டெனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.
உக்ரைன் உடன் போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு இரண்டாம் நிலை தடை எனப்படும் கூடுதல் வரிகளை ட்ரம்ப் அறிவித்தார்.
25 சதவீத வரி
இதனடிப்படையில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஏற்கனவே விதித்த 25 சதவீத வரியுடன், கூடுதலாக 25 சதவீத வரியை விதிப்பதாக அறிவிக்கப்பட்டது.
சீனா மற்றும் துருக்கி போன்ற பிற நாடுகள் மீது அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், சீனாவுக்கு 30 சதவீத வரியும மற்றும் துருக்கிக்கு 15 சதவீத வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகை
இந்தநிலையில், வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவித்த ட்ரம்ப், வரி விதித்து எட்டு மணி நேரம் மட்டுமே ஆகிறது எனவே, அடுத்ததாக என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என தெரிவித்துள்ளார்.
அத்தோடு, சீனாவுக்கு அடுத்ததாக, இந்தியா அதிகளவு கொள்முதல் செய்வதால் அதன் மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் மற்றும் ரஷ்யா ஒரு ஒப்பந்தத்தை எட்டினால், இந்தியா மீதான கூடுதல் வரிகளை கைவிடுவீர்களா என கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அதை நாங்கள் பின்னர் தீர்மானிப்போம் ஆனால் இப்போது, இந்தியா 50 சதவீத வரியை செலுத்தும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
