ட்ரம்பின் வரியால் வேலை இழக்க போகும் இலங்கை மக்கள் : விழுந்த பேரிடி
அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) வரி விதிப்பு காரணமாக இலங்கையில் பலர் வேலையிழக்கும் அபாயத்தில் சிக்கியுள்ளதாக கனடாவின் அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் 50 வீதம் ஆடை தொழிலில் தங்கியுள்ளது.
இதனூடாக இலங்கை மூன்று பில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்த ஆண்டு பெற்றுள்ள நிலையில், அமெரிக்க ஏற்றுமதி பொருட்களில் பெறுமளவில் இலங்கை எவ்வளவு வீதம் தங்கியுள்ளது என்பது இதில் புலப்பட கூடியதாகவுள்ளது.
இந்தநிலையில், தற்போது விதிக்கப்பட்ட 44 சதவீத வரிவிதிப்பால் இந்த ஏற்றுமதி தடைபடுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதுடன் இலங்கை பொருளாதாரமே முற்றாக இங்கு தடைப்படும்.
இவ்வாறான பொருளாதார தடையின் நிமித்தம் பல தொழிற்சாலைகள் அதிகம் மூடப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதுடன் நாட்டு மக்கள் வேலை இழக்க நேரிடும்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சர்வதேச அரசியல், ட்ரம்பின் வரி விதிப்பால் இலங்கை எதிர் நோக்கவுள்ள பிரச்சினை, நாட்டின் பொருளாதாரம், மக்களின் வாழ்வாதாரம், வரி விதிப்பை அரசு எதிர்கொள்ளும் விதம், அரசாங்கத்தின் அடுத்த கட்ட நகர்வு மற்றும் இலங்கை பொருளாதாரத்தின் அடுத்த கட்டம் தொடர்பில் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றை ஊடறுப்பு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
3 நாட்கள் முன்