ஐரோப்பிய நாடுகளுக்கான ஆயுத விநியோகத்தை தாமதப்படுத்தபோகும் அமெரிக்கா
ஈரான் போர் தொடர்ந்து ஆயுதக் கையிருப்புகளைப் பாதித்து வருவதால், முன்னர் ஒப்பந்தம் செய்யப்பட்ட சில ஆயுத விநியோகங்கள் தாமதமாகக்கூடும் என்று அமெரிக்க அதிகாரிகள் தங்கள் ஐரோப்பிய அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தகவல்கள் பகிரங்கப்படுத்தப்படாததால், பெயர் குறிப்பிட விரும்பாத சில வட்டாரங்கள், பால்டிக் பிராந்தியம் மற்றும் ஸ்காண்டிநேவியா உட்பட பல ஐரோப்பிய நாடுகள் இதனால் பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளன.
கேள்விக்குட்பட்ட சில ஆயுதங்கள், வெளிநாட்டு இராணுவ விற்பனைத் திட்டம் (FMS) கீழ் ஐரோப்பிய நாடுகளால் வாங்கப்பட்டன என்றும், ஆனால் அவை இன்னும் வழங்கப்படவில்லை என்று அறிக்கைகளில் விவரித்துள்ளன.
தாமதமாக வாய்ப்பு
அந்த விநியோகங்கள் தாமதமாக வாய்ப்புள்ளது என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

வெள்ளை மாளிகையும் வெளியுறவுத் துறையும் இந்தக் கேள்விகளை பென்டகனுக்குப் பரிந்துரைத்ததாகவும், ஆனால் கருத்து தெரிவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பென்டகன் இன்னும் பதிலளிக்கவில்லை என கூறியுள்ளன.
பெப்ரவரி 28 அன்று அமெரிக்க - இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களுடன் தொடங்கிய ஈரானுக்கு எதிரான போர், சில முக்கிய ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுக்கான அமெரிக்க விநியோகத்தை எந்த அளவிற்குப் பாதிக்கத் தொடங்கியுள்ளது என்பதை இந்தத் தாமதங்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
இந்தத் தாமதங்கள் தங்களைச் சிரமமான நிலைக்குத் தள்ளுவதாக ஐரோப்பிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஐரோப்பாவின் மரபுசார் பாதுகாப்பிற்கான பொறுப்பை அமெரிக்காவிலிருந்து ஐரோப்பிய கூட்டாளிகளின் மீது மாற்றுவதற்கான ஒரு முயற்சியின் பகுதியாக, டொனால்ட் ட்ரம்ப் காலத்தில், அமெரிக்கா தனது ஐரோப்பிய நேட்டோ பங்காளிகளை அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அதிகப் பொருட்களை வாங்குமாறு வலியுறுத்தியுள்ளது.
ஆனால், இதுபோன்ற ஆயுத விநியோகங்கள் பெரும்பாலும் தாமதமாவதால், ஐரோப்பியத் தலைநகரங்களில் விரக்தி ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |