ஈரானை விட்டு உடனே வெளியேறுங்கள் - அமெரிக்கா அதிரடி அறிவிப்பு
ஈரானை (Iran) விட்டு உடனே வெளியேறுமாறு தனது குடிமக்களுக்கு அமெரிக்கா (USA) அறிவித்துள்ளது.
அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், ஈரானில் ஏற்பட்டு உள்ள போராட்டம் வன்முறையாக உருவாக கூடிய வாய்ப்புகள் உள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இதனால், கைது நடவடிக்கைகளும், காயங்களும் ஏற்பட கூடும். ஈரான் அரசு அதிகாரிகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர் என்று குறிப்பிட்டு உள்ளது.

வீதிகள் முடக்கம், பொது போக்குவரத்து பாதிப்புகள் மற்றும் இணையதளம் முடக்கம் எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன.
அதனால், அமெரிக்க குடிமக்கள் உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படியும், தரை வழியே அர்மீனியா மற்றும் துருக்கி நாடுகளுக்கு செல்லும்படியும் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.
உண்மையான பலி எண்ணிக்கை
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 648 ஆக அதிகரித்துள்ளதாக நோர்வேயை தளமாகக் கொண்ட 'ஈரான் மனித உரிமைகள்' அமைப்பு தெரிவித்துள்ளது.
இவர்களில் குறைந்தபட்சம் ஒன்பது சிறுவர்களும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உண்மையான பலி எண்ணிக்கை இதைவிட பல மடங்கு அதிகமாக இருக்கலாம் என மனித உரிமை அமைப்புகள் அச்சம் தெரிவிக்கின்றன.
பெரும்பாலான உயிரிழப்புகள் தலை மற்றும் கண்கள் குறிவைக்கப்பட்டு சுடப்பட்டதால் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |