பிஜி தீவை உலுக்கிய 5.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
Earthquake
World
By Shalini Balachandran
தெற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிஜி தீவில் இன்று (7) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆகப் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் 506.6 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆய்வு அமைப்பு
ஆய்வு அமைப்பு இதனை அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
பசிபிக் நெருப்பு வளையப் பகுதியில் பிஜி தீவு அமைந்துள்ளது.

இதனால் அடிக்கடி மற்றும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படக்கூடிய பகுதியாக இது உள்ளது.
எனினும் இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்