கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்க கடற்படை கப்பல்
                                    
                    Colombo
                
                                                
                    Sri Lanka
                
                                                
                    United States of America
                
                        
        
            
                
                By Shalini Balachandran
            
            
                
                
            
        
    அமெரிக்க (America) கடற்படைக்கு சொந்தமான USS Spruance என்ற கப்பல் கொழும்பு (Colombo) துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
குறித்த கப்பலானது இன்று (19) நாட்டை வந்தடைந்துள்ளது.
இலங்கை கடற்படையின் வரவேற்புடன் கொழும்பு துறைமுகத்திற்கு நங்கூரமிட்ப்பட்ட Arleigh Burke-class destroyer 'USS Spruance' கப்பலானது நூற்று அறுபது மீற்றர் (160) நீளம் கொண்டுள்ளதுடன் மொத்தம் முந்நூற்று முப்பத்தெட்டு (338) பணியாளர்களை கொண்டு இயக்கப்படுகிறது.
அமெரிக்க கடற்படை
இந்தநிலையில், வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்த பின்னர், 'USS Spruance' என்ற கப்பல் 2024 ஒகஸ்ட் 20 அன்று நட்டை விட்டு புறப்பட உள்ளது.

மேலும், ஜிகாபிட் ஈதர்நெட் டேட்டா மல்டிபிளக்ஸ் சிஸ்டம் (GTEMS) பொருத்தப்பட்ட அமெரிக்க கடற்படையின் அழிப்பான் கப்பல்களில் இது முதன்மை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                
            மரண அறிவித்தல்
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
 
                 
                         
                         
                         
                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        