பொலிஸாரின் மிருகத்தனத்தை மன்னிக்கப் போவதில்லை! கடுமையாக சாடும் உதய கம்மன்பில
srilanka
uthaya gammanpila
By Vasanth
பொலிஸ் மிருகத்தனத்தை எந்த வகையிலும் மன்னிக்கப் போவதில்லை என அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், பன்னிப்பிட்டிய பகுதியில் லொறியின் சாரதியை தாக்கி
ய பொலிஸ் அதிகாரி மீது, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நான் பொலிஸ்மா அதிபரிடம் கேட்டுக்கொண்டேன். உலகம் முழுவதும் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறும் நிலையில் அரசைக் குறை கூற முடியாது.
அமெரிக்காவில் கூட கடந்த ஆண்டு பொலிஸ் அதிகாரியால் ஒரு கறுப்பினத்தவர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் போது அமெரிக்க அரசை எவரும் குறை கூறவில்லை என்றார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்