தனது மகன் காவல்துறையில் சரணடைவார் : ஊவா மாகாண ஆளுநர் உறுதி
பெண் ஒருவரை தாக்கி, காயப்படுத்திய சம்பவம் தொடர்பில், தனது மகன் மொஹமட் இசாம் ஜமால்தீன் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க மாட்டார் என்றும், நாளை காவல்துறையினர் முன்னிலையில் பிரசன்னமாவார், என்றும் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார்.
மேலும், தமது மகன் தலைமறைவாகவில்லை எனவும் செவ்வாய்க்கிழமையோ அல்லது அதற்கு முன்னதாகவோ காவல்துறையினரிடம் சரணடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக முஸம்மில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அவர் தலைமறைவாகிவிட்டார் என்ற செய்தி உண்மைக்குப் புறம்பானது என்பதை காவல்துறையினர் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றும் முஸம்மில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு ஹவ்லொக் டவுனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இளம் பெண் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் முகமது இசாம் ஜமால்தீனைக் கைது செய்ய காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய காலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |