மாவீரர்களை நினைவேந்த தயாராகும் வடமராட்சி கிழக்கு!
யாழ். வடமராட்சி கிழக்கு உடுத்துறை துயிலும் இல்லம் மாவீரர் தின நினைவேந்தல்களுக்கு தயாராகி வருகிறது தமிழ்த்தேச விடுதலைக்காக மாண்ட மாவீரர்களை உணர்வெழுச்சியுடன் நினைவேந்துவதற்கு தமிழர் தாயகம் முழுவதும் இன்று (27.11.2025) தயார் நிலையில் உள்ளது.
வடக்கு, கிழக்கில் 25 இற்கும் மேற்பட்ட துயிலும் இல்லங்கள், மாவீரர் நினைவிடங்கள் மற்றும் விசேடமாக அமைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயங்களில் உணர்வெழுச்சியுடன் மாவீரர்கள் நினைவேந்தப்படவுள்ளனர்.
நினைவேந்தல்
பலத்த மழைக்கு மத்தியிலும் துயிலும் இல்லங்கள், மாவீரர் நினைவிடங்கள் விசேடமாக அமைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயங்கள் சிவப்பு, மஞ்சள் வர்ண கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு நினைவேந்தலுக்குத் தயார் நிலையில் உள்ளன.

இன்று மாலை 6.05 க்கு ஆலயங்களில் மணியோசை எழுப்பப்பட துயிலும் இல்லங்கள், வீடுகள், பொது இடங்களில் சமநேரத்தில் சுடர் ஏற்றப்படவுள்ளது. இந்நிலையில் உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லமும் மாவீரர்களை நினைவேந்த எழுச்சி கொண்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |