மாவீரர் தினத்தையொட்டி தெல்லிப்பழையில் வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு!
மாவீரர் தினத்தை முன்னிட்டு இன்று (27.11.2025) பிற்பகல் 2 மணியுடன் தெல்லிப்பழையில் அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுவதற்கு வர்த்தகர்கள் தீர்மானித்துள்ளனர்.
அதன்படி, இன்று (27.11.2025) வலி வடக்கிற்கு உட்பட்ட அனைத்து இறைச்சிக்கடைகள், தனியார் கல்வி நிலையங்களும் பிரதேசசபைத் தீர்மானத்திற்கு அமைய மூடப்படவுள்ள நிலையில் தெல்லிப்பழையிலுள்ள அனைத்து கடைகளையும் பிற்பகல் 2 மணியுடன் மூடுவதற்கு தெல்லிப்பழையிலுள்ள வர்த்தகர்கள் தீர்மானித்துள்ளனர்.
நினைவேந்தல்
இதேவேளை, அனைத்து வர்த்தகர்களும் வர்த்தக நிலையங்களை மூடி வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக சிவப்பு மஞ்சள் கொடிகளை பறக்க விடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இறுதி நினைவேந்தல் நிகழ்வுக்காக துயிலுமில்லங்கள், குறித்த பிரதேசங்களிலுள்ள மாவீரர் நினைவாலயங்களில் ஒன்றுகூடி உணர்வுபூர்வமாக மாவீரர் தினத்தை அனுஷ்டிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |