வட்டுக்கோட்டை 50 ஆவது எழுச்சி மாநாடு! விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
Sri Lankan Tamils
Batticaloa
Jaffna
By Independent Writer
வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு “வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாடு" எனும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
குறித்த நிகழ்வானது, யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா அரங்கில் எதிர்வரும் ஜுன் 20ம் திகதி நடைபெறவுள்ளது.
பாடல் வெளியீட்டு விழா
இதேவேளை, இந்த வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாட்டுக்கான பாடல் வெளியீட்டு விழா மட்டக்களப்பில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (07.06.2026) பி.ப. 2.00 மணிக்கு அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

குறித்த நிகழ்வில் தமிழ்தேசிய அரசியல்வாதிகள், தமிழ்தேசிய செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், தமிழ்தேசிய பற்றாளர்கள் என அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்