வலிகாமம் வடக்கு : முப்பத்தாறு ஆண்டுகளாக நீளும் ஒரு மக்களின் சொந்த மண்ணிற்கான காத்திருப்பு…

Sri Lanka Army Sri Lankan Tamils Jaffna
By Theepachelvan Jun 15, 2026 05:22 AM GMT
Report
Courtesy: தீபச்செல்வன்

ஒரு மக்களிடமிருந்து அவர்களின் நிலத்தைப் பறித்துக்கொள்ளலாம். வீடுகளை இடித்தழிக்கலாம். கிராமங்களின் பெயர்களை வரைபடங்களில் இருந்து அழிக்கலாம்.

ஆனால் அவர்களின் நினைவுகளை அழிக்க முடியாது. மண்ணோடு கலந்த அவர்களின் உறவை துண்டிக்க முடியாது. வலிகாமம் வடக்கு மக்களின் வரலாறு இதற்கான உயிருள்ள சாட்சியாக இன்று வரை நிற்கிறது.

இன்றுடன் 36 ஆண்டுகள்

1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி, ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் தமது சொந்த வீடுகளிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

பலாலி, மயிலிட்டி, வசாவிளான், காங்கேசன்துறை, கீரிமலை, தையிட்டி உள்ளிட்ட பரந்த கிராமங்களை உள்ளடக்கிய வலிகாமம் வடக்கு பகுதி இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

வலிகாமம் வடக்கு : முப்பத்தாறு ஆண்டுகளாக நீளும் ஒரு மக்களின் சொந்த மண்ணிற்கான காத்திருப்பு… | Vali North People Waiting For 36 Years Homeland

துப்பாக்கிச் சத்தங்களும் போர் விமானங்களின் இரைச்சலும் சூழ்ந்த அந்த நாட்களில், “சில நாட்களுக்குப் பிறகு திரும்பிவிடலாம்” என்ற நம்பிக்கையுடன் மக்கள் வெளியேறினார்கள்.

ஆனால் அந்த வெளியேற்றம் சில நாட்களுக்கானதல்ல; அது முப்பத்தாறு ஆண்டுகளாக நீடிக்கும் வரலாற்றுத் துயரமாக மாறியது. இலங்கைத் தீவின் வடபகுதியில் மிகவும் வளமான நிலப்பரப்புகளில் ஒன்றாக வலிகாமம் வடக்கு விளங்கியது.

வளமான விவசாய நிலங்கள், கடல்சார் வாழ்வாதாரங்கள், புகழ்பெற்ற கல்வி மரபுகள், பண்பாட்டு அடையாளங்கள் ஆகியவற்றைக் கொண்டிருந்த இந்தப் பகுதி, வெறும் நிலப்பரப்பாக அல்லாமல் யாழ்ப்பாணத் தமிழரின் சமூக வரலாற்றின் ஒரு முக்கிய அத்தியாயமாக இருந்தது.

யாழ். போதனாவில் 32 வயது இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழ். போதனாவில் 32 வயது இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

தடை செய்யப்பட்ட நிலங்கள்

ஆனால் போரின் தீவிரமடைந்த காலகட்டத்தில் பலாலி விமானப்படைத் தளம் மற்றும் அதனைச் சூழ்ந்த பகுதிகளைப் பாதுகாப்பதன் பெயரில் மிகப்பெரிய உயர் பாதுகாப்பு வலயம் உருவாக்கப்பட்டது.

வலிகாமம் வடக்கு : முப்பத்தாறு ஆண்டுகளாக நீளும் ஒரு மக்களின் சொந்த மண்ணிற்கான காத்திருப்பு… | Vali North People Waiting For 36 Years Homeland

அந்த உயர் பாதுகாப்பு வலயம் உருவாக்கப்பட்ட விதம் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் வாழ்க்கையை ஒரே நாளில் புரட்டிப்போட்டது. மக்கள் வாழ்ந்த கிராமங்கள் வரைபடங்களில் இருந்தபோதிலும், அவற்றுக்குள் செல்ல முடியாத தடைப்பட்ட நிலங்களாக மாறின.

உலக வரலாற்றில் போர்களும் ஆக்கிரமிப்புகளும் பல நிகழ்ந்திருக்கின்றன. ஆனால் எந்த இடத்திலும் ஒரு மக்களின் சொந்த நிலத்தை பல தசாப்தங்களாக அவர்களிடமிருந்து மறுத்துவைப்பது மனித உரிமைகளின் அடிப்படை கோட்பாடுகளுக்கே எதிரானதாகும். வலிகாமம் வடக்கு மக்களின் அனுபவம் அதையே சுட்டிக்காட்டுகிறது.

யாழ் மாவட்ட செயலகம் முன்பாக வெடித்த போராட்டம் : ஆளுநரிடம் மனு கையளிப்பு

யாழ் மாவட்ட செயலகம் முன்பாக வெடித்த போராட்டம் : ஆளுநரிடம் மனு கையளிப்பு

வாழ் நிலமென்பது

நிலம் என்பது வெறும் பொருளாதார வளமல்ல. அது நினைவுகளின் களஞ்சியம். ஒரு குழந்தை முதன்முதலில் நடந்த மண். ஒரு தாய் தனது பிள்ளையைத் தாலாட்டிய வீடு. ஒரு தந்தை மரம் நட்ட முற்றம். ஒரு குடும்பத்தின் முன்னோர்கள் உறங்கும் மயானம். ஒரு சமூகத்தின் ஆலயங்கள், பாடசாலைகள், குளங்கள், வயல்கள், கடற்கரைகள். இவை அனைத்தையும் உள்ளடக்கியதே நிலம்.

அதனால் தான் வலிகாமம் வடக்கு மக்களின் போராட்டம் காணிக்கான போராட்டம் மட்டுமல்ல; அது நினைவுகளையும் அடையாளத்தையும் மீட்டெடுக்கும் போராட்டமாகும்.

வலிகாமம் வடக்கு : முப்பத்தாறு ஆண்டுகளாக நீளும் ஒரு மக்களின் சொந்த மண்ணிற்கான காத்திருப்பு… | Vali North People Waiting For 36 Years Homeland

இன்று முப்பத்தாறு ஆண்டுகள் கடந்துள்ளன. வெளியேறியவர்களில் பலர் மீண்டும் தமது வீடுகளைப் பார்க்காமலேயே இறந்துவிட்டனர். தமது மண்ணுக்குத் திரும்ப வேண்டும் என்ற ஆசையை மனதில் சுமந்தபடியே அவர்கள் உலகைவிட்டுச் சென்றனர்.

அகதி முகாம்களில் பிறந்த குழந்தைகள் இன்று நடுத்தர வயதை எட்டியுள்ளனர். தாங்கள் பிறக்குமுன் இழந்த கிராமங்களைப் பற்றி பெற்றோரின் கதைகளிலிருந்தே அவர்கள் அறிந்துள்ளனர்.

அவர்களது மனங்களில் உருவான சொந்த ஊர் ஒரு நினைவுப் புவியியல். நேரில் காணாத மண்ணை நினைவின் வழியே நேசிக்கும் ஒரு தலைமுறை உருவாகியுள்ளது.

செம்மணி மனிதப்புதைகுழியை பார்வையிடவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தினர்!

செம்மணி மனிதப்புதைகுழியை பார்வையிடவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தினர்!

இராணுவத்தின் ஆக்கிரமிப்பு

போர் முடிவடைந்து பதினேழு ஆண்டுகள் கடந்துள்ளன. ஆயினும் மீள்குடியேற்றம் முழுமையாக நிறைவேறவில்லை. சில பகுதிகள் விடுவிக்கப்பட்டிருந்தாலும், பல காணிகள் இன்னும் மக்களிடம் ஒப்படைக்கப்படவில்லை.

வலிகாமம் வடக்கு : முப்பத்தாறு ஆண்டுகளாக நீளும் ஒரு மக்களின் சொந்த மண்ணிற்கான காத்திருப்பு… | Vali North People Waiting For 36 Years Homeland

பல இடங்களில் இராணுவத்தின் இருப்பு தொடர்கிறது. தனியார் காணிகள் பாதுகாப்பு தேவைகளின் பெயரில் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுகின்றன.

இது மக்களிடையே ஆழமான விரக்தியையும் அநீதியுணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. இராணுவ ஆக்கிரமிப்பின் தாக்கம் நில இழப்பில் மட்டும் முடிவதில்லை. அது சமூக வாழ்க்கையின் ஒவ்வொரு பரிமாணத்தையும் பாதிக்கிறது.

விவசாயிகள் தமது வயல்களை இழக்கிறார்கள். மீனவர்கள் தமது கடல்சார் வாழ்வாதாரத்திலிருந்து விலக்கப்படுகிறார்கள். ஆலயங்கள் பக்தர்களின்றி தனிமையில் நிற்கின்றன. பாடசாலைகள் மாணவர்களின் சிரிப்பொலியை இழக்கின்றன. தலைமுறைகள் உருவாக்கிய சமூக உறவுகள் சிதைகின்றன. ஒரு மக்களின் இயல்பான வாழ்க்கைச் சுழற்சி முறிவடைகிறது.

நாட்டில் 40 இலட்சம் பேர் TIN இலக்கம் பெறவில்லை - அம்பலமான தகவல்

நாட்டில் 40 இலட்சம் பேர் TIN இலக்கம் பெறவில்லை - அம்பலமான தகவல்

நினைவில் உள்ள நிலம்

இலங்கை அரசுகள் மாறின. ஜனாதிபதிகள் மாறினார்கள். அமைச்சர்கள் மாறினார்கள். நல்லிணக்கம், சமாதானம், மறுசீரமைப்பு, தேசிய ஒற்றுமை போன்ற சொற்கள் அரசியல் மேடைகளில் மீண்டும் மீண்டும் ஒலித்தன. ஆனால் வலிகாமம் வடக்கு மக்களின் அடிப்படை கேள்வி இன்னும் பதிலின்றியே உள்ளது.

“எப்போது நாம் எமது சொந்த நிலத்தில் மீண்டும் வாழப்போகிறோம்?” போருக்குப் பின்னரான நீதியின் கேள்வி இது. ஒரு நாட்டில் வாழும் மக்களுக்கு தமது சொந்த நிலத்தில் வாழும் உரிமையே உறுதிப்படுத்தப்படாவிட்டால், அந்த நாட்டின் சமாதானம் எவ்வளவு உறுதியானதாக இருக்க முடியும்?

வலிகாமம் வடக்கு : முப்பத்தாறு ஆண்டுகளாக நீளும் ஒரு மக்களின் சொந்த மண்ணிற்கான காத்திருப்பு… | Vali North People Waiting For 36 Years Homeland

இம் மக்களின் போராட்டம் இந்தக் கேள்விகளின் தொடர்ச்சியாகும். இது ஒரு நாள் போராட்டமல்ல. முப்பத்தாறு ஆண்டுகளாக நீளும் காத்திருப்பின் வெளிப்பாடு. மறக்கப்பட்ட மக்களின் நினைவூட்டல். “நாங்கள் இன்னும் இருக்கிறோம்; எங்கள் நிலத்தையும் எங்கள் உரிமையையும் மறந்துவிடவில்லை” என்று உலகிற்குச் சொல்லும் ஒரு கூட்டு சாட்சி.

வலிகாமம் வடக்கு மக்களின் போராட்டம் ஒரு பிரதேசத்தின் போராட்டம் மட்டுமல்ல. அது போரால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களின் உரிமைப் போராட்டத்தின் குறியீடாகும்.

நிலம் மீட்கப்படாமல் நீதி முழுமையடையாது. இராணுவ ஆக்கிரமிப்பு முடிவுக்கு வராமல் இயல்புநிலை திரும்பாது. மக்களின் சொந்த நிலங்கள் மக்களிடமே ஒப்படைக்கப்படாமல் நல்லிணக்கம் அர்த்தமடையாது.

முப்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்பு வெளியேறிய மக்கள் இன்று கூட தமது வீட்டு வாசல்களை நினைவில் வைத்திருக்கிறார்கள். தமது கிணற்றின் நீரின் சுவையை நினைவில் வைத்திருக்கிறார்கள். ஆலயத் திருவிழாக்களின் ஓசைகளை நினைவில் வைத்திருக்கிறார்கள்.

அந்த நினைவுகளே அவர்களின் போராட்டத்திற்கு உயிரூட்டுகின்றன. 36 ஆண்டுகள் கடந்தும் வாழ் நிலத்திற்காகத் தொடர்கின்ற இந்தப் போராட்டத்திற்கு விரைவில் நீதியும் தீர்ப்பும் முடிவும் கிடைக்க வேண்டும்.

ஆடை விற்பனை நிலையம் ஒன்றிற்குள் இருந்து கணவன் - மனைவி சடலங்கள் மீட்பு!

ஆடை விற்பனை நிலையம் ஒன்றிற்குள் இருந்து கணவன் - மனைவி சடலங்கள் மீட்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017