சட்ட விரோத செயற்பாடுகள்! வலி.கிழக்கு பிரதேச சபையினை முற்றுகையிட்டு போராட்டம் (படங்கள்)
வலிகாமம் கிழக்கு பிரதேச சபை முன்றலில் பிரதேச சபை செயலாளரை அச்சுறுத்தியவரை கைது செய்யக் கோரி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இப்போராட்டாமானது இன்றையதினம் காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மதில் அமைக்கப்படுவது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் பார்வையிட செயலாளர் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் அவ்விடத்திற்கு சென்றுள்ளனர்.
முறைப்பாட்டுடன் தொடர்புடையவர் செயலாளரை அச்சுறுத்தி அவருடைய கைத்தொலைபேசியை பறித்து உடைத்ததுடன் அதனை எடுத்தும் சென்றுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அச்சுவேலி காவல்நிலையத்தில் முறைப்பாடு பதியப்பட்டுள்ளது.
எனினும் குறித்த நபர் வெளிநாட்டு பிரஜை எனவும் தற்போது அவர் நாட்டை விட்டு வெளியேறி உள்ளதாகவும் குறித்த நபரை உடனடியாக கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



