வல்வெட்டித்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட 4 மாணவர்கள்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
வல்வெட்டித்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நால்வரும் நேற்று இரவு (21-07-2026) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்றைய தினம் வல்வெட்டித்துறை காவல்துறையினரால் சீலாப்புலம் கிராமத்தைச் சேர்ந்த நான்கு பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மனித உரிமைகள்
பாடசாலைக்கு ஒழுங்காகச் சமூகமளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் இம்மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்கள், இரவு 7:48 மணி வரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவோ அல்லது விடுவிக்கப்படவோ இல்லை.

இதனால் காவல் நிலையத்திற்குச் சென்ற பெற்றோர், மாணவர்களைத் தங்களுடன் அனுப்பி வைக்குமாறும் நாளை காலை மீண்டும் காவல் நிலையத்திற்கு அழைத்து வருமாறும் கோரியபோதிலும் அவர்களை விடுவிப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்த நிலையில் மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
4 நாட்கள் முன்