வன்னி பிரதி காவல்துறைமா அதிபராக விஜயசேகர நியமனம்
வவுனியா வன்னி பிராந்தியத்தின் பிரதி காவல்துறைமா அதிபராக இலங்கை போதை ஒழிப்பு பிரிவின் பணிப்பாளராக செயற்பட்ட எஸ். ரி. விஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை காலமும் பிரதி காவல்துறைமா அதிபராக கடமையாற்றி வவுனியாவில் நடைபெற்ற இரட்டைக் கொலை சந்தேக நபர்களை கைது செய்வதற்கு சிறப்புடன் செயற்பட்ட பி. அம்பாவில இலங்கையின் குற்ற தடுப்பு பிரிவின் பிரதி காவல்துறைமா அதிபராக இடமாற்றம் பெற்று செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் அனுமதியின் கீழ், பிரதி காவல்துறைமா அதிபர்கள் மூவர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
காவல்துறை விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி பிரதி காவல்துறைமா அதிபர் வருண ஜயசுந்தர, சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபராக பதவி உயர்வு பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குற்றப்பிரிவுக்கு பொறுப்பாக இருந்த பிரதி காவல்துறைமா அதிபர் கே.வி.டி.ஏ.ஜே. கரவிட்ட சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபராக பதவி உயர்வு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு பொறுப்பாக இருந்த பிரதி காவல்துறை மா அதிபர் எஸ்.டபிள்யூ.எம். சேனாரத்னவும் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபராக பதவி உயர்வு பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.