வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய உற்சவம் ஆரம்பம் - பக்தர்களுக்கு முக்கிய அறிவித்தல்

Mullaitivu Hinduism Vattappalai Kannaki Amman Kovil
By Vanan May 30, 2022 09:37 PM GMT
Report

முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் இன்று (30.05.2022) அதிகாலை பாக்குத்தெண்டலுடன் ஆரம்பமாகியுள்ளது.

நாட்டில் ஏற்பட்ட கொரோனா தாக்கம் காரணமாக இரண்டு வருடங்கள் பக்தர்கள் ஆலயத்துக்கு வருகின்ற நிகழ்வானது தடை செய்யப்பட்டு, ஆலய நிவர்வாகத்தினர் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஆலய சம்பிரதாய கிரிகைகளை நடாத்த அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், இம்முறை கட்டுப்பாடுகள் அற்ற நிலையில் ஆலய கிரிகைகள் சிறப்புற ஆரம்பமாகியுள்ளது.

ஆரம்ப நிகழ்வு

வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் ஆரம்ப நிகழ்வாக இடம்பெறும் பாக்குத்தெண்டல் உற்சவம் இன்று (30) அதிகாலை வேளையில் இடம்பெற்றது.

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய உற்சவம் ஆரம்பம் - பக்தர்களுக்கு முக்கிய அறிவித்தல் | Varappalai Kannaki Amman Temple Festival 2022

முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தில் இன்று அதிகாலை 2 மணிக்கு இடம்பெற்ற வழிபாடுகளை தொடர்ந்து, வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலுடன் நீண்ட தொடர்பை பேணி வந்த குடியானவர்களுக்கு மரவு வழியாக அறிவிப்பதற்காக அவர்களது வீடுகளுக்குச் சென்று பாக்குத்தெண்டல் இடம்பெற்றது.

கண்ணகி தெய்வத்தின் பக்தனாகிய பக்தஞானி தென்னிந்தியாவில் இருந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை கிராமத்தில் தங்கியிருந்த காலத்தில் வற்றாப்பளை பொங்கல் சடங்குகளை ஓர் சீர்வரிசைப்படுத்துவதற்காக பாக்குத்தெண்டல் தொடக்கம் சிலாவத்தை தீர்த்தக்கரையில் தீர்தம் எடுத்தல் காட்டு விநாயகர் ஆலயத்தில் தீபமேற்றுதல் போன்ற பல சடங்குகளை அருளி நின்றார்.

வைகாசி விசாகப் பொங்கல்

வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வைகாசி விசாகப்பொங்கல் சடங்கு பற்றி கோவிலுடன் நீண்ட தொடர்பை பேணி வந்த குடியானவர்களுக்கு மரவு வழியாக அறிவிக்கும் பொங்கலின் ஓர் ஆரம்ப சடங்கே இந்த பாக்குத்தெண்டல் உற்சவமாகும்.

இந்த சம்பிரதாய நிகழ்வோடு ஆரம்பமாகும் உற்சவம் வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வைகாசி விசாக பொங்கலுடன் நிறைவடையும்.

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய உற்சவம் ஆரம்பம் - பக்தர்களுக்கு முக்கிய அறிவித்தல் | Varappalai Kannaki Amman Temple Festival 2022

இன்று பாக்கு தெண்டலுடன் ஆரம்பமான இவ்வாண்டுக்கான (2022) வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தில் 06-06-2022 திங்கட்கிழமை தீர்த்தம் எடுக்கும் நிகழ்வும், அதனைத் தொடர்ந்து 13-06-2022 திங்கட்கிழமை வற்றாப்பளை கண்ணகி அம்மனின் பொங்கல் உற்சவத்துடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  


Gallery
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025