சிறைச்சாலைகளில் அதிகரிக்கும் நெரிசலைக் குறைக்க பல்வேறு விசேட நடவடிக்கைகள்

Sri Lanka Prisons in Sri Lanka Prison
By Pavi Sep 21, 2026 09:23 AM GMT
Report

சிறைச்சாலைகளில் நிலவும் அதிக நெரிசலைக் குறைப்பதற்காக, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கான இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கைகளை துரிதமாக வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆட்சி, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக்க தலைமையில் கூடியபோது இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட கைதிகளை விட, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களின் எண்ணிக்கை சிறைச்சாலை நெரிசலுக்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதாக இதன்போது தெரியவந்துள்ளது.

உயர்கல்வித் தகுதியுடைய இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை இலங்கையில் 43 சதவீதம்

உயர்கல்வித் தகுதியுடைய இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை இலங்கையில் 43 சதவீதம்

தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் 

குறிப்பாக, போதைப்பொருள் குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்படும் சந்தேகநபர்களுக்கான இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கைகள் தாமதமடைவதால், பிணை பெற முடியாமல் நீண்ட காலம் விளக்கமறியலில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறைச்சாலைகளில் அதிகரிக்கும் நெரிசலைக் குறைக்க பல்வேறு விசேட நடவடிக்கைகள் | Various Measures To Reduce Overcrowding In Prisons

சில சந்தேகநபர்கள் 18 மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரையிலும் இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கைகள் இன்றி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறியளவிலான போதைப்பொருள் குற்றங்களுக்காக கைது செய்யப்படும் போதைக்கு அடிமையானவர்களை நேரடியாக சிறையில் அடைப்பதற்குப் பதிலாக, மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்புவதற்கான சட்டத் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, கைதிகளை நேரடியாக நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் காணொளி இணைப்பு ஊடாக நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கச் செய்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் சிறைச்சாலை அதிகாரிகளின் பற்றாக்குறையையும், கைதிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லும்போது ஏற்படும் பாதுகாப்பு அபாயங்களையும் குறைக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், நான்கு ஆண்டுகளுக்கும் குறைவான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்கள், அபராதத் தொகையை செலுத்த முடியாத சிறிய குற்றங்களில் ஈடுபட்டவர்கள், வயோதிபர்கள் மற்றும் நீண்டகால மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோர் தொடர்பில் தற்போதுள்ள சட்ட நடைமுறைகளின் கீழ் மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகளுடன் சிறையில் உள்ள தாய்மார்களின் வழக்குகளை துரிதமாக நிறைவு செய்வதற்காக விசேட நீதிமன்ற நடைமுறையொன்றை அறிமுகப்படுத்தும் யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

அனோஜனுக்காக இறுதிப் போராட்டம் : கந்தையா பாஸ்கரன் விடுத்துள்ள கோரிக்கை

அனோஜனுக்காக இறுதிப் போராட்டம் : கந்தையா பாஸ்கரன் விடுத்துள்ள கோரிக்கை

டொலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதியில் சிறிய மாற்றம்

டொலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதியில் சிறிய மாற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்