“எது விருப்பமோ அதனை போடுங்கள்” பொறுப்பில்லாமல் பதிலளித்த அரச அதிபர்!!

isolation self vavuniya covid
By Vasanth Jan 14, 2021 03:23 PM GMT
Report

வவுனியா நகரத்திற்குள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ள முடக்க நிலை தொடர்பாக அரச அதிபர் முரணான தகவலை வழங்கிய நிலையில் இது தொடர்பாக விளக்கம் கோரச்சென்ற தமிழ் ஊடகவியலாளர்களிடம் “எது விருப்பமோ அதனை போடுங்கள்” என்று பொறுப்பில்லாமல் பதிலளித்தார்.

வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனையடுத்து இன்றையதினம் மாவட்ட செயலகத்தில் அவசர கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த கலந்துரையாடலில் நகரின் முக்கிய பகுதிகளை முடக்குவதற்கு நடவடிக்கையினை முன்னெடுக்கவேண்டும் என்று சுகாதார தரப்பினர் பரிந்துரை செய்திருந்தனர்.

குறித்த கூட்டம் நிறைவடைந்த நிலையில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த அரச அதிபர் சமன்பந்துலசேன, பி.சி.ஆர் பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட 2000 பேரின் முடிவுகள் கிடைக்கப்பெற்றபின்னரே வவுனியா நகரை முடக்குவது தொடர்பில் ஆராயமுடியும் என தெரிவித்திருந்தார்.

எனினும் இது தொடர்பில் பிராந்திய சுகாதாரசேவைகள் பிரதிப் பணிப்பாளரிடம் கேட்டபோது வவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் வவுனியா நகரினை உடன் அமுலாகும் வரையில் முடக்குவதற்கு தாம் பரிந்துரை செய்துள்ளதாகவும் இது தொடர்பாக உத்தியோகபூர்வமாக மாவட்டசெயலகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் அரச அதிபரிடம் விளக்கம் கோரியபோது சிங்களத்தில் பதிலளித்த அவர் எது விருப்பமோ அதனை போடுங்கள் என்று பொறுப்பில்லாத வகையில் பதில் அளித்தி்ருந்தார்.

எனினும் சுகாதாரபணிப்பாளர் தெரிவித்தபடி உடனடியாக நகருக்கு வருகைதரும் எல்லைகளான நெளுக்குளம் சந்தி, இரட்டைபெரியகுளம், மாமடுசந்தி,தாண்டிக்குளம் ஆகிய பகுதிகளில் பொலிசாரால் வீதித்தடை அமைக்கப்பட்டு,உள்ளேவருபவர்கள் தடுத்துநிறுத்தப்பட்டதுடன், நகருக்குள் அமைந்துள்ள வியாபாரநிலையங்களையும் உடனடியாக மூடுமாறு பொலிசார் அறிவித்தனர்.

இதனால் அசௌகரியமடைந்த பொதுமக்கள் அவசர அவசரமாக நகரைவிட்டு வெளியேறியிருந்தனர்.

முடக்க நிலை முன்னெடுக்கப்பட்டு குறித்த கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் இது தொடர்பாக கருத்து கூறுமாறு அரச அதிபரிடம் தமிழ் ஊடகவியலாளர்கள் கோரிக்கைவிடுத்தனர்.

இதன்போது மீண்டும் தனது நிலைப்பாட்டில் பின்வாங்காத அவர் முடக்கம் அமுல்படுத்தப்படவில்லை. 2000 பேரின் பிசீஆர் முடிவுகள் கிடைக்கபெற்ற பின்னரே நகரம் முடக்கப்படும் என தான் பிடித்த முயலுக்கு மூன்றுகால் என்றவாறாக முரணான தகவலை தெரிவித்திருந்தார்.

மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச்செல்லும் நிலையில் முக்கிய பொறுப்பில் உள்ள அரச அதிபர் பொறுப்பற்ற விதத்தில் பதில் அளித்தமையானது கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் அரச திணைக்களங்களிற்கிடையில் ஒற்றுமையின்மையை வெளிப்படுத்துவதாக பலரம் தமது விசனத்தை வெளியிட்டுள்ளனர். T

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி