தேவையற்ற வகையில் தயவு செய்து வராதீர் -பொதுமக்களிடம் விடுக்கப்பட்ட வினயமான வேண்டுகோள்
#Vavuniya General Hospital #Self-isolation #Covid-19
By Vasanth
கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் தேவையற்ற வகையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தரவேண்டாமென வைத்தியசாலை பணிப்பாளர் த.காண்டீபன் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் குறிப்பாக கர்ப்பிணித்தாய்மார்கள், குழந்தைகள் போன்றோர் அவசிய தேவையை தவிர வைத்தியசாலைக்கு வருவதை முற்றாக தவிர்த்துக் கொள்ளுங்கள் மாதாந்த மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளும் நோயாளர்கள் மாவட்ட வைத்தியசாலைக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி தகவல்களை பெற்றுக்கொண்ட பின்னரேயே வருகை தரவேண்டும்.
அத்துடன் வைரஸ் தாக்கத்தினை கருத்தில் கொண்டு வைத்தியசாலை வளாகத்தினை தொற்று நீக்கும் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி