வவுனியாவில் அதிக கட்டணம் அறவிட்ட தனியார் வைத்தியசாலைக்கு அபராதம்!

Vavuniya Hospitals in Sri Lanka Ministry of Consumer Affairs Authority
By Independent Writer Jul 29, 2026 10:57 AM GMT
Courtesy: kapil

வவுனியாவில் முழு இரத்த பரிசோதனைக்காக (FBC) அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணத்தை விட கூடுதல் தொகை அறவிட்ட தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு வவுனியா நீதவான் நீதிமன்றம் 500,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது. ​

நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 67ஆம் இலக்க உத்தரவின் அடிப்படையில், வவுனியா மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை விசாரணை அதிகாரிகளால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ​

கடந்த ஜூலை 14 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையின்போது, 400 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்ட முழு இரத்தப் பரிசோதனைக்கு குறித்த வைத்தியசாலை 550 ரூபாய் கட்டணம் அறவிட்டமை கண்டறியப்பட்டது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல் : விசாரணைகள் தீவிரம்

யாழ்.போதனா வைத்தியசாலையில் பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல் : விசாரணைகள் தீவிரம்

 வவுனியா நீதவான் நீதிமன்றம்

இந்த வழக்கு ஜூலை 28 ஆம் திகதி வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதிமன்றம் குறித்த வைத்தியசாலைக்கு 500,000 ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தது.

வவுனியாவில் அதிக கட்டணம் அறவிட்ட தனியார் வைத்தியசாலைக்கு அபராதம்! | Vavuniya Hospital Overcharging For Fbc Bood Tests

அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணத்தை விட கூடுதல் தொகை அறவிடும் தனியார் வைத்தியசாலைகள் அல்லது மருத்துவ ஆய்வகங்கள் தொடர்பான தகவல்களை 1977 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலி : மோதிய வாகனம் தப்பியோட்டம்

மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலி : மோதிய வாகனம் தப்பியோட்டம்

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் : யாழ். கடலில் கறுப்புக் கொடிப் போராட்டம்

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் : யாழ். கடலில் கறுப்புக் கொடிப் போராட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்