வவுனியாவில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு முண்டியடித்த மக்கள்!
By Kalaimathy
வவுனியாவில் இன்று பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மக்கள் முண்டியடித்ததை காணக்கூடியதாக இருந்ததோடு வங்கிகளிலும் மக்கள் தொகை அதிகமாக காணப்பட்டது.
நாடளாவிய ரீதியில் பயணத்தடை தளர்வு செய்யப்பட்டதையடுத்து மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நகர்ப்புறதிதை நோக்கி அதிகளவில் வருகை தந்திருந்த நிலையில் நகர்ப்பகுதியில் அதியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் மக்கள் முண்ணியடித்து காணப்பட்டனர்.
இதேவேளை நகருக்குள் வரும் வீதிகளில் பொலிஸார் அத்தியாவசியமின்றி நகருக்கள் வருபவர்களை திருப்பியனுப்பியதுடன் மோட்டார் சைக்கிள் துவிச்சிக்கரவண்டியில் பயணிப்போரை மாத்திரம் நகருக்கள் செல்ல அனுமதித்திருந்தனர்.
இதேவேளை வங்கிகளிலும் நகை அடைவு பிடிக்கும் கடைகளிலும் மக்கள் வரிசையாக நின்றதுடன் பொருட்கொள்வனவுக்காகவும் மக்கள் வரிசையாக நின்றதை அவதானிக்க முடிந்தது.




மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்