காணாமலாக்கப்பட்ட மகனைத் தேடியலைந்த தந்தை மரணம்- தொடரும் துயரம்!
srilanka
vavuniya
By Vasanth
வவுனியாவில் காணாமல் போன தனது மகனைத் தேடி அலைந்த தந்தை ஒருவர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா தாலிக்குளம் பகுதியை சேர்ந்த சந்தணம் ராகவன் வயது 65 என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரது மகன் ராஜ்குமார் கடந்த 2008 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டிருந்தார் .
அவரைத்தேடி வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களில் குறித்த தந்தை கலந்து கொண்டு தனது மகனை மீட்பதற்காக தொடர்ச்சியாக போராடியிருந்தார்.
இந்நிலையில் மகனை காணாமலேயே அவர் இன்று உயிரிழந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்