வவுனியாவில் தினம் தோறும் அதிகரிக்கும் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை!
srilanka
vavuniya
northern
provincecorona
By Vasanth
வவுனியா நகரப் பகுதிகளை சேர்ந்த 16பேருக்கு இன்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கோரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களிற்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.
அதன் ஒருபகுதி முடிவுகள் இன்று காலை வெளியாகின.
அதனடிப்படையில் வவுனியா மில் வீதியில் உள்ள வியாபார நிலையங்களில் பணிபுரியும் 16 பேருக்கு தொற்று இருக்கின்றமை உறுதிசெய்யப்பட்டது.
குறித்த எண்ணிக்கையுடன் வவுனியா நகர்பகுதியில் கடந்த ஒருவாரத்தில் மாத்திரம் 146 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி