வவுனியாவில் பொலிஸ் எனக்கூறி தங்க நகை கொள்ளை! மூவர் சிக்கினர்
வவுனியாவில் கடந்தவாரம் பொலிசார் என தெரிவித்து 30பவுண் நகை கொள்ளையிடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா நகர் மற்றும் தேக்கவத்தை பகுதிகளில் உள்ள வீடுகளிற்கு சென்ற இனம் தெரியாத நபர்கள், தங்களை பொலிசார் என கூறியுள்ளனர்.
பின்னர் வீட்டில் சோதனை செய்வது போல பாசாங்கு செய்து விட்டு இரு வீடுகளில் இருந்தும் 30 பவுண் தங்க ஆபரணங்களை களவாடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
அதற்கமைய குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூன்று பேரை வவுனியா பொலிசார் இன்று கைது செய்துள்ளனர்.
அவர்களில் ஒருவர் ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் என்று கூறப்படுகின்றது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றில் முற்றப்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது