ஒழுக்கமென்பது கேள்வி கேட்காத கீழ்ப்படிவல்ல- பல்கலைகழக ஆசிரியர் சங்கத்தினரால் ஆர்பாட்டம்!
கொத்தலாவலை இராணுவ பல்கலைகழக சட்டமூலத்திற்கு எதிராக வவுனியா பல்கலைகழக ஆசிரியர் சங்கத்தினரால் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா பல்கலைகழகம் அமைந்துள்ள பம்பைமடுப்பகுதியில் இன்று குறித்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்,
கன்னங்கராவால் முன்மொழியப்பட்ட இலவசக்கல்விக்கு குந்தகம் விளைவிக்கும் செயற்பாடுகளுக்கும், பல்கலைகழகங்களை தனியார் மயப்படுத்தி இராணுவ மயப்படுத்துவதையும் எதிர்த்தும் நாம் இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளோம்.
இந்த சட்டமூலத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு நாம் தொடர்ந்து ஒத்துழைப்புவழங்குவோம் எனத் தெரிவித்துள்ளனர்.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொத்தலாவல சட்டமூலத்தினை முறியடிக்க ஒன்றிணைவோம், ஒழுக்கமென்பது கேள்விகேட்காத கீழ்படிவல்ல, கொத்தலாவல இராணுவத்திற்கு- அரச பல்கலைக்கழகம் பொதுமக்கள் கல்விக்கு, இராணுவக்கல்வியும், பொதுமக்கள் கல்வியும் ஒன்றாக்க முடியாது போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
