"வெடுக்குநாறிமலை தமிழர்களுடைய சொத்து" காவல்நிலையத்தை முற்றுகையிட்டு பாரிய போராட்டம்

Vavuniya S. Sritharan SL Protest Hinduism Selvarajah Kajendren
By Shadhu Shanker Mar 15, 2024 07:12 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

புதிய இணைப்பு

வவுனியா - வெடுக்குநாறி மலை ஆதிசிவனார் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் விடுவிக்கக்கோரியும் காவல்துறையினரின் அராஜகத்தை கண்டித்தும் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டமானது தற்போது நெடுங்கேணி காவல் நிலையத்தை அடைந்துள்ளது.

நெடுங்கேணி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தற்போது, மக்கள் காவல்துறையினருக்கு எதிராக தமது ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் காவல் துறை உயர் அதிகாரிகள் மக்களிடத்தில் உரையாட வருகைதந்தபோதும் அதை புறக்கணித்த மக்கள் அவர்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

இதன் காரணமாக விசேட அதிரடிப்படியினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


"வெடுக்குநாறிமலை தமிழர்களுடைய சொத்து" காவல்நிலையத்தை முற்றுகையிட்டு பாரிய போராட்டம் | Vedukunarimali Issue Vavuniya Srilanka Tamil News

"வெடுக்குநாறிமலை தமிழர்களுடைய சொத்து" காவல்நிலையத்தை முற்றுகையிட்டு பாரிய போராட்டம் | Vedukunarimali Issue Vavuniya Srilanka Tamil News

முதல் இணைப்பு 

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் பேரையும் விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டமொன்று ஆரம்பமாகியுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டமானது, இன்று வவுனியா - நெடுங்கேணியில் தற்போது இடம்பெற்று வருகிறது.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்லஸ் நிர்மலநாதன், சிவஞானம் சிறீதரன், வினோநோதராதலிங்கம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

அரச ஊழியர்களுக்கு விழுந்த பேரிடியை தகர்த்த ரணில்! அதிகரிக்கப்படும் கொடுப்பனவுகள்

அரச ஊழியர்களுக்கு விழுந்த பேரிடியை தகர்த்த ரணில்! அதிகரிக்கப்படும் கொடுப்பனவுகள்

வெடுக்குநாறி மலை விவகாரம் 

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற சிவராத்திரி பூஜை வழிபாடுகளின்போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

"வெடுக்குநாறிமலை தமிழர்களுடைய சொத்து" காவல்நிலையத்தை முற்றுகையிட்டு பாரிய போராட்டம் | Vedukunarimali Issue Vavuniya Srilanka Tamil News

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி உற்சவம் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை 6 மணியுடன் அனைத்து வழிபாடுகளையும் முடிவுக்கு கொண்டுவருமாறும், காவல்துறையினரின் கட்டளையை மீறும் பட்சத்தில் குறித்த நபர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

இருப்பினும், ஆலய நிர்வாகத்தினர் பூஜை நிகழ்வுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வந்த நிலையில், அன்னதானம், பொங்கல் மற்றும் பூஜை பொருட்கள் என சுமார் 10 இலட்சம் பெறுமதியான பொருட்களை காவல்துறையினர் எடுத்துச் சென்றனர்.

இதன் காரணமாக பூஜை வழிபாடுகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளதுடன், பூஜையின்போது கலகம் அடக்கும் காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஆலயத்தில் குவிக்கப்பட்டதுடன், சப்பாத்துக்கள் அணிந்தபடி ஆலயத்துக்குள் புகுந்த காவல்துறையினர், வழிபாட்டில் கலந்துகொண்ட பெண்களையும் அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தினர்.

யாழ்ப்பாண இளைஞனுக்கு அடித்த அதிஷ்டம் : சென்னை அணியில் கிடைத்த வாய்ப்பு

யாழ்ப்பாண இளைஞனுக்கு அடித்த அதிஷ்டம் : சென்னை அணியில் கிடைத்த வாய்ப்பு

செல்வராஜா கஜேந்திரன் தாக்குதல்

இதன்போது ஆலய நிர்வாகத்தினர் உள்ளிட்ட வழிபாடுகளில் கலந்துகொண்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்னர். நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனை தாக்கி, காவல்துறையினர் கைது செய்ய முயன்றதுடன், அவர் நாடாளுமன்ற உறுப்பினர் என தெரியவந்ததையடுத்து, அவரை தூக்கிச் சென்று ஆலய முன்றலில் போட்டுவிட்டுச் சென்றிருந்தனர்.

"வெடுக்குநாறிமலை தமிழர்களுடைய சொத்து" காவல்நிலையத்தை முற்றுகையிட்டு பாரிய போராட்டம் | Vedukunarimali Issue Vavuniya Srilanka Tamil News

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் நெடுங்கேணி காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, ஆலயத்திற்கு குடிநீர் வழங்க காவல்துறையினர் மறுப்பு தெரிவித்தமையால் அங்கு காவல்துறையினருக்கும் பக்தர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதுடன் காவல்துறையினர் ஆலய வளாகத்துக்குள் குடிநீர் எடுத்துச் செல்ல இடையூறு ஏற்படுத்தியிருந்தனர்.

இதனால் குடிநீரின்றி மக்கள் அவதிப்பட்ட நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், தமிழ் அரசுக் கட்சி மத்திய குழு உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியன், மற்றும் ஆலய பக்தர்கள் குடிநீர் தாங்கியுடன் வந்த உழவு இயந்திரத்தை ஆலயத்துக்குள் விடுமாறு காவல்துறையினருடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரத போராட்டம்

3 மணியளவில் குடிநீரை வழங்க காவல்துறையினர் இணங்கினர். அதன் பின்னர், குடிநீருடன் உழவு இயந்திரம் வந்தபோது அந்த வாகனம் காட்டுப் பகுதியில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

"வெடுக்குநாறிமலை தமிழர்களுடைய சொத்து" காவல்நிலையத்தை முற்றுகையிட்டு பாரிய போராட்டம் | Vedukunarimali Issue Vavuniya Srilanka Tamil News

அதில் பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட நிலையில் தமக்கான நீதி வழங்கக் கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 12ஆம் திகதி தொடங்கிய குறித்த உண்ணாவிரத போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் நீடித்து வருகின்றது. கைதுசெய்யப்பட்ட எட்டு பேரில் ஆலய பூசாரியார் ,மற்றும் தமிழ்ச்செல்வன், கிந்துயன், தவபாலசிங்கம், விநாயகமூர்த்தி ஆகியோரே உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

பாரிய ஆர்ப்பாட்டம்

இதேவேளை அவர்கள் வழமை போல உணவினை உட்கொள்வதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

"வெடுக்குநாறிமலை தமிழர்களுடைய சொத்து" காவல்நிலையத்தை முற்றுகையிட்டு பாரிய போராட்டம் | Vedukunarimali Issue Vavuniya Srilanka Tamil News

இதனையடுத்து, வவுனியாவை சேர்ந்த சட்டத்தரணிகளான கொன்சியஸ் மற்றும் திலிப்காந் ஆகியோர் சிறைச்சாலைக்கு சென்று அவர்களை பார்வையிட்டதுடன் அவர்கள் உண்ணாவிரதம் இருக்கின்றமையினை உறுதிப்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் உறவுகள் நீதிகோரி நேற்று வவுனியாவில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்க அழைப்பு விடுத்திருந்தனர்.

இதன் பின்னணியில் வவுனியாவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கல்முனை, Montreal, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, நாவற்குழி, கொழும்பு

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொக்குவில், Toronto, Canada

19 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Markham, Canada

07 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, Datteln, Germany, Olfen, Germany

23 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், கொழும்பு 6

27 Jul, 2025
மரண அறிவித்தல்

சிலாபம், Viby, Denmark

25 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், உருத்திரபுரம்

23 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி, London, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைதீவு, ப்றீமென், Germany

26 Jul, 2020
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

kilinochchi, London, United Kingdom

06 Aug, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Chenevières, France

21 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
மரண அறிவித்தல்

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Woodbridge, Canada

29 Jul, 2022
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024